மோட்டோரோலாவின் மோட்டோ பட்ஸ் மற்றும் மோட்டோ பட்ஸ்+ அறிமுகம்


உலகின் முன்னணி தொழில்நுட்ப பிராண்டான மோட்டோரோலா, இந்தியாவில் மோட்டோ பட்ஸ் மற்றும்  மோட்டோ பட்ஸ்+  ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ தயாரிப்புக்கள் அறிமுகப்படுத்தப்படுவதை அறிவித்தது.  இந்த அறிமுகத்திற்காக, மோட்டோரோலா இந்தியா முழுவதிலும் உள்ள சிறந்த இசைக் கலைஞர்களை கொண்டு ஐந்து வெவ்வேறு மொழிகளில் ஐந்து பாடல்களை உருவாக்கி அதை இறுதியில் ஒரே இணைவு இசைக்கோவையாகத் தொகுக்க அனைத்துக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து ஒரு கச்சிதமான இசைக்கோவையை தயாரித்து உருவாக்கிய ஒரு அறிவு சார் சொத்தான 'சௌண்ட் ஆஃப் பெர்ஃபெக்க்ஷன்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

2024, மே 15 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட், மோட்டோரோலா.இன் ஆகியவற்றில் மோட்டோ பட்ஸ்+ மற்றும் மோட்டோ பட்ஸ் விற்பனைக்கு வரும். மோட்டோ பட்ஸ்+ அறிமுக விலையாக ரூ. 9,999க்கும், மோட்டோ பட்ஸ் அறிமுக விலையாக ரூ. 4,999க்கு கிடைக்கும்.   வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு  வரையறுக்கப்பட்ட காலத்துக்கு உடனடியாக சிறப்பு வங்கித் தள்ளுபடியாக  மோட்டோ பட்ஸ்+ மீது ரூ.2,000 வரையிலும் மோட்டோ பட்ஸ் மீது ரூ. 1000 வரையிலும்  கூடுதல் சலுகையைப்  நுகர்வோர்கள் பெறலாம்.

 மோட்டோ பட்ஸ்+ டூயல் டைனமிக் டிரைவர்கள் (11மிமீ+6மிமீ) , 42 மணிநேரம் வரை நீடிக்கும் கேஸ் பேட்டரி பேக்கப், 10 நிமிட விரைந்த சார்ஜில் 3 மணிநேரம் வரை தொடர்ந்து எந்த ஒரு தடையுமின்றி கேட்டு மகிழும் வசதி, டால்பி அட்மாஸ், டால்பி ஹெட் டிராக்கிங்,  ஒரு பரந்த விரிவான டைனமிக் வீச்செல்லை மற்றும் 3மடங்கு கூடுதல் தரவு வீதத்துடன்   ஒலி அரங்க தரத்துடனான இசையை வழங்கும் ஹை-ரெஸ் ஆடியோ,  பல்வேறு  கேன்செல்லேஷன் மோடுகளில் இருந்து பயனர்கள் தங்களுக்கு சிறப்பாக செயல்படும் உகந்த மோடை கண்டறிய உதவும் டைனமிக் அடாப்டிவ் நாய்ஸ் கேன்செல்லேஷன் தொழில்நுட்பம் ,  46டிபி வரையிலான நாய்ஸ் கேன்செல்லேஷன், 3.3கிஹர்ட்ஸ் வரையிலான அல்ட்ராவைட் நாய்ஸ் கேன்செல்லேஷன், நீர்ச்சிதறல்களுக்கெதிரான நீர் எதிர்ப்புத் திறன், இரைச்சலை நுண்ணறிவோடு அடையாளம் கண்டு ரத்து செய்வதற்கான அளவுகளை தானாகவே இயங்கச்செய்யும் அடாப்டிவ் மோட் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. மோட்டோ பட்ஸ்+ மோட்டோ சுற்றுச்சூழமைப்போடு தங்கு தடையின்றி ஒருங்கிணைந்து  மோட்டோ பட்ஸ் ஆப் உடனான அனுபவத்தை மேம்படுத்துகிறது.

மோட்டோ பட்ஸ் அதன் எக்ஸ்பார்ட் டியூனிங் 12.4மி.மீ. டைனமிக் டிரைவர் மூலம், உயர்தர ஒலி, பரந்த விரிவான டைனமிக் வீச்சளவு மற்றும் 3 மடங்கு கூடுதல் டேட்டாவுக்கான ஹை-ரெஸ் ஆடியோ சான்றளிக்கப்பட்ட ஒலி அமைப்பு, 50டிபி வரையிலான நாய்ஸ் கேன்சல் மற்றும் 4கே ஹர்ட்ஸ் வரை அல்ட்ராவைட் நாய்ஸ் கேன்சல் வரம்புகளுடன் கூடிய பல்வேறு நாய்ஸ் கேன்சல் மோட்கள், 10 நிமிட சார்ஜ் மூலம் 2 மணி நேர தடையில்லா இசை,  முழு சார்ஜ் செய்யப்பட்ட கேஸ் மூலம்    42 மணி பயன்பாட்டு நேரம், இரைச்சலைக் கட்டுப்படுத்த டிரிப்பிள்-மைக் சிஸ்டம், குரலொலியை தெளிவாக கேட்க க்ளிஸ்டெல் டாக் ஏஐ, குறைந்த எடை,  நீர் எதிர்ப்புத் திறன் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. இது ஸ்டார்லைட் ப்ளூ, கிளேசியர்ப்ளூ மற்றும் கோரல் பீச் ஆகிய இளமையான பான்டோன்- க்யூரேட்டட் வண்ணங்களில்   கிடைக்கின்றன என மோட்டோ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form