தமிழ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள்: மறுகட்டமைப்புக்கான அடித்தளம் போடும் முத்தூட் ஃபைனான்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய தங்க நகைக் கடன் என்பிஎஃப்சி நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது, தனது முத்தூட் ஆஷியான திட்டத்தின் கீழ் ஆறு புதிய வீடுகளுக்கான கட்டுமானத் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், சிவராமமங்கலம் பள்ளிவாசல் தெருவில் அடிகல் நாட்டு விழாவை நடத்தியது.   இது முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது மாநிலத்தில் முத்தூட் ஆஷியான திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சிதைத்த டிசம்பர் 2023 வெள்ளத்தின் போது வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மொத்தம் 10 நிரந்தர வீடுகளை இந்நிறுவனமானது கட்டித்தர இருக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மாயவன், ஸ்ரீவைகுண்டம் தாலுகா வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன்,   ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா தாசில்தார் சிவக்குமார், எஸ்இஆர்டி அறக்கட்டளை தலைவர்  ஆயர் ஸ்லீபா ஜான்,  தமிழ்நாடு தெற்கு முத்தூட் ஃபைனான்ஸ் மண்டல மேலாளர் மணிகண்டன்,  முத்தூட் ஃபைனான்ஸ் திருநெல்வேலி மண்டலம் மண்டல மேலாளர் காளிராஜ்,  முத்தூட் ஃபைனான்ஸ் திருவனந்தபுரம் மூத்த மேலாளர்-சட்டத்துறை ஷமீர்,  நிர்வாக உதவியாளர், முத்தூட் நிதித் தலைவர் செயலர் கே. பைஜு, முத்தூட் ஃபைனான்ஸ் தலைவர் அலுவலகம் மேலாளர் அசோக் மேத்யூ, மேலாளர்- சிஎஸ்ஆர் ஜெயக்குமார்,   திருநெல்வேலி மண்டல நிர்வாக மேலாளர் சுரேஷ், பஞ்சாயத்து தலைவர் இளவரசன்,  ஓய்வுபெற்ற கூடுதல் ஆட்சியர், எஸ்எஸ்டி அறக்கட்டளை விஜய குமார்,  ஊராட்சித் தலைவர் பழனியம்மாள்,  பெருமாள், சரவணன்,  முத்தூட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த திட்டமான முத்தூட் ஆஷியானா மூலம் வீடுகளை கட்டுவது மட்டுமல்லாமல், இந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. இந்த புதிய வீடுகள் உறுதியான மற்றும் பாதுகாப்பான வாழ்விடங்களை வழங்கும். மேலும், குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை கண்ணியத்துடன் மீண்டும் கட்டியெழுப்ப அனுமதிக்கும். இந்த முயற்சியானது முத்தூட் ஆஷியானால் இந்தியா முழுவதும் கட்டப்பட்ட 257 வீடுகளின் குறிப்பிடத்தக்க மைல்கல்லைச் சேர்க்கிறது.

இதுகுறித்து பேசிய முத்தூட் குழுமத்தின் தலைவர் ஜார்ஜ் ஜேக்கப் முத்தூட், "தேவையின் போது மக்களுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். முத்தூட் ஆஷியானா திட்டத்தின் விரிவாக்கம் தமிழ்நாட்டின், பெரும் இழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்ட உதவுகிறது. அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த புதிய வீடுகளில் செங்கற்கள் மற்றும் மோட்டார் மட்டுமல்ல, நம்பிக்கையின் சின்னமாகவும் புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பாகவும் உள்ளது” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form