அனிபா பிரியானி உலக பசி தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற 2500 பேருக்கு பிரியாணி வழங்கியது



உலக பசி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் ஆதரவற்றோர் 2500 பேருக்கு பசியாற பிரியாணி வழங்கிய நிகழ்ச்சி நடந்தது. பிரியாணிகளின் ராஜா அனிபா பிரியாணி உணவகம் நடத்திய இந்த நெகிழ்ச்சியான நிகழ்வி KPY பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு பிரியாணி வழங்கி மகிழ்ந்தார்.

ஆண்டுதோறும் மே 28ம் தேதி உலக பசி தினம் அனுசரிக்கப் படுகிறது. உலகம் முழுவதும் பசியால் வாடும் மில்லியன் கணக்கான மக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதை பல்வேறு நாடுகளில் கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு பசி தினத்தை முன்னிட்டு தேனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல பிரியாணிக உணவகமான அனிபா பிரியாணி ஆதரவற்ற ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இதற்காக உருவாக்கப் பட்டிருந்த பிரத்யேக இலவச உணவு வாகனம் தேனி மற்றும் சுற்றுப்புறங்களில் பயணித்து சாலையோரம் இருக்கும் ஆதரவறோர், ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்போர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

இலவச உணவு வாகனத்தை முன்னாள் எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் சமூக சேவகர் கேபிஒய் பாலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடந்து ஆதரவற்றோருக்கு பிரியாணி பொட்டலங்களையும் அவர் வழங்கி நெகிழ்ச்சி அடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அனிபா பிரியாணி நிறுவனர் பாசித் ரஹ்மான் பேசுகையில், எங்களது அனிபா பிரியாணி உணவகம் தமிழ்நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட கிளைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  ஆதரவற்றோருக்கு உதவும் நோக்கில் உலக பசி தினத்தை முன்னிட்டு இன்று தேனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கியுள்ளோம். இதேப்போல மற்ற கிளைகளில் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 2500க்கு அதிகமான பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form