மாதவிடாய் ஆரோக்கியத்தில் புரட்சி ஏற்படுத்தும் ஹெல்த்ஃபேப்பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் என்பது அவர்களது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த பெண்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இந்தியாவில் எண்ணற்ற சிறுமிகள் மாதவிடாயை நிர்வகிக்க போதுமான பராமரிப்பு பொருட்கள் இல்லாததாலும், மாதவிடாய் மீதுள்ள தவறான கண்ணோட்டம்  காரணமாகவும் - மாதவிடாய் ஏற்படும் போது பள்ளிக்கு செல்வதையே தவிர்த்து விடுகின்றனர். இந்த அவல நிலையை மாற்ற, பல நிறுவனங்கள் மற்றும் சமூக  அமைப்புகள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்களைத் முன்னெடுத்து வருகின்றன.

 மூன்று ஆண்களால் நிறுவப்பட்ட ஹெல்த்ஃபேப்   சந்தையில் மலிவான, பயனுள்ள மற்றும் சௌகரியமான அம்சங்கள் யாவையும் ஒருங்கே உள்ளடக்கிய மாதவிடாய் பராமரிப்பு தயாரிப்புகள் இல்லை என்பதை கண்டறிந்தனர். ஹெல்த்ஃபேப்-இன் இணை-நிறுவனர்கள், தங்களது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் கவனித்த விஷயங்களால் உந்தப்பட்டு, புதுமையான தயாரிப்புகள் மூலம் பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஹெல்த்ஃபேப்-ஐ துவங்கினர். 

புதுமையான, சௌகரியமான மற்றும் சமூகப் பொறுப்புள்ள தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம், ஹெல்த்ஃபேப் அதன் தொழில்துறையில் புதிய தரநிலைகளை உருவாக்கி வருகிறது. நடைமுறைக்கு ஏற்ற வகையில் பயனுள்ள தீர்வுகளை வழங்க வேண்டும் என்கிற ஹெல்த்ஃபேப்-இன் அர்ப்பணிப்பு - பல பெண்களின் வாழ்க்கையில் தொடர்ந்து நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  அதன் தயாரிப்பு வகைகளை தொடர்ந்து விரிவுபடுத்துவதோடு, தொடர்ந்து வளர்ந்தும் வரும் ஹெல்த்ஃபேப்-இன் முன்னேற்றமானது - உலகளவில் பெண்களின் எதிர்கால ஆரோக்கியம் மற்றும் செயலாற்றல் பிரகாசமாக இருக்கும் நம்பிக்கையைத் தருகிறது.

ஹெல்த்ஃபேப்-ன் கோ பெயின்ஃப்ரீ ஃபாஸ்ட் பீரியட் பெய்ன் ரிலீஃப்  மூலிகை கிரீம் மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வயதுப் பெண்களும் பயன்படுத்த உகந்ததாகும். ஆயுர்வேத மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட இதில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. இதன் மூலம், வலி நிவாரண மாத்திரைகளின் தேவை இல்லாமல் விரைவான நிவாரணம் பெறலாம். 

கோபேட் ஃப்ரீ ஹெவி லீக்-ப்ரீஃப் ரீயுசபிள் காட்டன் பீரியர் பேண்டி ஹெல்த்ஃபேப்-இன் மற்றொரு அற்புதமான தயாரிப்பாகும். கசிவின் தொந்தரவு இல்லாத மாதவிடாய் அனுபவத்தை வழங்க இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  மிகவும் சௌகரியமான பருத்தியிலிருந்து தயாரிக்கப்படும் இந்த உள்ளாடைகள் - உதிரப்போக்கை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதி செய்ய மைக்ரோஃபைபர் அடுக்குகளுடன் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளன. வழக்கமான மாதவிடாய் தயாரிப்புகளைப் போலன்றி, சலவை செய்ய எளிதான கோபேட்ப்ரீ உள்ளாடைகளை மீண்டும் பயன்படுத்தலாம். மறுமுறை பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் உள்ளாடைகளின் மூலம், ஹெல்த்ஃபேப் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 315 டன் பிளாஸ்டிக் சானிட்டரி கழிவுகளை குறைக்க பெண்களுக்கு உதவியுள்ளது என ஹெல்த்ஃபேப் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form