க்ரீம்லைன் டெய்ரி புராடக்ட்ஸ் லிமிடெட் மற்றும் துவாரா இ-டெய்ரி உடன் இணையும் கோத்ரெஜ் கேபிடல்



கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவான கோத்ரேஜ் கேபிடல் நிறுவனமானது பால் பண்ணை கடன்களை மேற்கொள்ள இருப்பதை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், விவசாயப் பிரிவில் தனது நுழைவை அறிவித்துள்ளது. க்ரீம்லைன் டெய்ரி புராடக்ட்ஸ் லிமிடெட் மற்றும் துவாரா இ-டெய்ரி ஆகியவற்றுடன் ஒரு வணிக ரீதியாக கூட்டாண்மை  மேற்கொள்வதன் மூலம், கோத்ரெஜ் கேபிடல் தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் உள்ள சிறு பால் பண்ணை உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்கும்.  

க்ரீம்லைன் டெய்ரி புராடக்ட்ஸ் லிமிடெட் என்பது கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட்-ன் துணை நிறுவனமாகும். இது கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பன்முகப்படுத்தப்பட்ட உணவு மற்றும் வேளாண் வணிகக் குழுமமாகும். மேலும் கோத்ரெஜ் ஜெர்சி என்ற பிராண்டின் கீழ் தயாரிப்புகளை விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பால் பொருட்களின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  பால் பண்ணையாளர்களுக்கு வாய்ப்புகள் மற்றும் சவால்கள் அதிகரித்துள்ளது.  கோத்ரெஜ் கேபிடல், இந்த விவசாயிகளுக்கு நெகிழ்வான நிதியுதவியுடன் தொழிலை வலுவூட்டுவதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்கிறது, இது உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், பிராந்தியத்தில் பொருளாதார செழுமைக்கு பெரிதளவில் உதவும். 

பால் பண்ணை கடன்களுடன், கோத்ரெஜ் கேபிடல் ஆனது ஜிஏவிஎல் உடன் இணைக்கப்பட்ட விவசாயிகளுக்கு கால்நடைகளை வாங்குவதற்கும் பராமரிப்பதற்கும் பிணையில்லாமல் கடன் வழங்கும்.  இந்த கடன் வழங்கல் ஆனது பால் பண்ணை உரிமையாளர்களுக்கு நிதியுதவிக்கான வாய்ப்பை உறுதி செய்யும். மேலும் முழு டிஜிட்டல் செயல்முறை, விரைவான அனுமதி மற்றும் விநியோகம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் அம்சம் உட்பட மற்ற நன்மைகளும் அடங்கும்.

கோத்ரேஜ் கேபிட்டலின் எம்டி அண்ட் சிஇஒ மணீஷ் ஷா பேசுகையில், “எங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு எங்கள் ஆதரவை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்த முயற்சியைத் தொடங்குவதற்கான காரணம், பால் பண்ணை சமூகத்திற்கு நிதி உதவியை வழங்குதல், மதிப்புச் சங்கிலி முழுவதும் நிதிச் சேர்க்கையை ஊக்குவித்தல் மற்றும் சூழலியல் சார் அமைப்புகளை ஆதரித்தல் ஆகியவற்றின் அழுத்தமான தேவையின் பிரதிபலிப்பாகும்” என்றார்.

கோத்ரெஜ் ஜெர்சியின் தலைமை செயல் அதிகாரி பூபேந்திர சூரி பேசுகையில், “ கோத்ரேஜ் கேபிடல் மற்றும் துவாரா இ-டெய்ரி இடையேயான இந்த கூட்டாண்மை மூலம் விவசாயிகள் அவர்களின் கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் பிற விவசாயத் தேவைகளுக்கான நிதியை எளிதாகப் பெற உதவும்” என்றார்.

துவாரா இ-டெய்ரியின் நிறுவனர், எம்டி மற்றும் சிஇஓ ஆன ரவி கே.ஏ பேசுகையில் “கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழும நிறுவனங்களுடன் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆயிரக்கணக்கான பால் பண்ணையாளர்கள் கோத்ரெஜ் கேபிட்டலில் இருந்து மலிவு நிதியுதவி மற்றும் கால்நடை கடன்களுக்கான புதுமையான தளத்தை பெற பெரிதளவில் கைக்கொடுக்கும் பொன்னான வாய்ப்பு இதுவாகும்.  இந்த ஏற்பாடு நிதிச் சேவைகளை வீட்டு வாசலில் அணுகும், பால் உற்பத்தியை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்களுக்கு கைகொடுக்கும். மேலும், விவசாயிகளின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்து, தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form