மிரே அசெட் கேபிடல் மார்கெட்டின் புதிய திட்டம் அறிமுகம்மிரே அசெட் கேபிடல் மார்கெட் பிரைவேட் லிமிடெட், அதன் முன்னோடி திட்டமான 'மிரே அசெட் பார்ட்னர்ஸ்’ திட்டத்தை வெளியிட்டது. இந்த முன்முயற்சியானது மிரே அசெட் உடைய உலகளாவிய நிபுணத்துவத்தின் ஆதரவுடன் வரம்பற்ற சம்பாதிக்கும் திறன், நெகிழ்வுத்தன்மை இவற்றை அளித்து மற்றும் வணிக கூட்டாளர்களை மேம்படுத்துவதன் மூலம் புரோக்கிங் களத்தில் புரட்சியை ஏற்படுத்தவிருக்கிறது. 

இந்த தொழிலில் முதல் வருவாய் பகிர்வு மாடலான இது 100 சதவிதம் பகிர்வுகள் வரை அளித்து வணிக கூட்டாளர்களுக்கு 9 தனித்துவமான வருவாய் ஸ்ட்ரீம்களில் இருந்து சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது, இது அவர்களின் வருவாய் கணிசமாக அதிகரிக்க உதவுகிறது.

 மிரே அசெட் பார்ட்னர்ஸ் திட்டத்தின் ஒரு தனித்துவமான அம்சம் ஹைப்ரிட் வணிக மாடல் ஆகும். இது தள்ளுபடி  மற்றும் பாரம்பரியமாடல் இவற்றின் கலவையாகும். இது அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்களின் கிளயண்ட்களுக்கு மாறுபட்ட விலை திட்டங்களை உருவாக்குவதற்கான முழுமையான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.  மற்றொரு புதிய அம்சம் என்னவென்றால், இது அசெட்-ஐ சார்ந்து இல்லாமல் வணிகக் கூட்டாளர்கள் தங்கள் கிளையண்ட் உடைய விலைத் திட்டங்களைத் தனிப்பயனாக்கும் சக்தியைப் பெறுவார்கள். 

கூடுதலாக, மறைவாக உள்ள விதிமுறைகள், கடப்பாடு நிபந்தனை உட்பிரிவுகள் மற்றும் வணிக ஸ்லாப்களை நீக்கியதால் முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் வணிகக் கூட்டாளர்கள் சக்தி பெறுவார்கள்.  வணிகக் கூட்டாளர்கள் தனியுரிம ஆன்லைன் பார்ட்னர் டாஷ்போர்டு மூலம் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு அணுகல் பெறுவார்கள், இது விலைத் திட்டங்களை உருவாக்குதல், கிளையண்ட்களை இணைத்தல், திட்டங்களைத் தனிப்பயனாக்குதல் மற்றும் வாடிக்கையாளரின் நேரலை நிலைகள் மற்றும் அறிக்கைகளைக் கண்காணிப்பது போன்ற தடையற்ற திறன்களை வழங்குகிறது.

மிரே அசெட் கேபிடல் மார்கெட் உடைய சிஇஓ ஜீசாங் யூ கூறுகையில், "எங்கள் புதுமையான கூட்டாளர் திட்டம் மூலம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம், கிளையண்ட்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்யும் திறனை மேம்படுத்தவும், மேலும் திறமையாக செயல்படவும் வணிகக் கூட்டாளர்களுக்கு நாங்கள் சக்தியளிக்கிறோம்" என்று கூறினார்.

மிரே அசெட் ஆல் இயக்கப்படும் எம் டாட் ஸ்டாக் உடைய டைரக்டர் அண்ட் சிபிஒ அருண் சௌத்ரி கூறுகையில், “இந்தியாவில் உள்ள வணிகக் கூட்டாளர்கள், வணிக ஸ்லாப் கடப்பாடுகள், புரோக்கரேஜ் வருமானம் குறைவது, வரையறை கொண்ட வருமான ஆதாரங்கள், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் மற்றும் கிளையண்ட் சேவை தேவைகளின் அதிகரிப்பது போன்ற பல சவால்களை எதிர்கொள்வதை நாங்கள் உணர்கிறோம். இந்த வலிதரும் புள்ளிகளை விடாமுயற்சியுடன் சமாளித்து, 100 சதவிதம் வரை வருவாய் பகிர்வு, 9 தனித்துவமான வருவாய் ஈட்டும் ஸ்ட்ரீம்கள், வணிகத்தின் 100 சதவிதம் கட்டுப்பாடு, வணிக அளவைப் பொருட்படுத்தாமல் ஏற்றத்தாழ்வு அற்ற நிலை, வெளிப்படையான பணம் பட்டுவாடா போன்றவற்றை வழங்கும் ஒரு புரட்சிகர திட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form