பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துடன் ஏர் இந்தியா கூட்டாண்மைஇந்தியாவின் முன்னணி உலகளாவிய விமான நிறுவனமான ஏர் இந்தியா மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (பிஐஏஎல்) ஆகியவை தென்னிந்தியாவின் முதன்மையான விமானப் போக்குவரத்து மையமாக பெங்களூருவை மேம்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிற்கும்,  இந்தியாவிலிருந்துமான விமானப் பயண இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.இந்த ஒப்பந்தம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. ஏர் இந்தியா (மற்ற டாடா குழும விமான நிறுவனங்கள் - ஏஐஎக்ஸ் மற்றும் விஸ்தாரா உடன்) மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் இணைந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச இணைப்பு, செயல்பாட்டு திறன் மற்றும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தவுள்ளது.

மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் மூலம் பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் குழுவின் இருப்பை வலுப்படுத்தவும், டாடா குழும ஏர்லைன்ஸின் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவின் பிரீமியம் மற்றும் அடிக்கடி பயணிப்பவர்களுக்கான பிரத்யேக ஓய்வறையை நிறுவுவதும் இதில் அடங்கும். இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியா கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூரு விமான நிலையத்தில் விரிவான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் வசதிகளை செய்யும். இது பெங்களூரில் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான ஏர் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் காலப்போக்கில் அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தி, தென்னிந்தியாவில் இருந்து வரும் நேரடி நீண்ட தூர வழித்தடங்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும். இந்த கூட்டாண்மை எம்ஆர்ஓ சுற்றுச்சூழலை ஊக்குவித்து மாநிலத்தில் திறன் வாய்ந்த 1,200 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்ப்பெல் வில்சன் கூறுகையில், “உயர்ந்த வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் திறமையான செயல்பாடுகளுக்கு விமான வழி - விமான நிலைய ஒருங்கிணைப்பு முக்கியமானது ஆகும். அதே நேரத்தில் பெங்களூரு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கும் வேறு இடத்தில் இருந்து இலக்கு இடத்தை அடைய இணைக்கும் மையமாக மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. விமான நிலையத்தில் அதிக இருப்பை உருவாக்குதல், விமான இணைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் ஒரு பெரிய எம்ஆர்ஓ மையத்தை உருவாக்குதல் போன்ற நோக்கத்துடன் பிஐஏஎல் உடனான எங்கள் உறவை வலுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டு ஒப்பந்தம் ஏர் இந்தியாவின் தற்போதைய மாற்றத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form