பெரம்பலூரில் டாடா ஹிட்டாச்சி புதிய எந்திரம் அறிமுகம்அகழ்தலின் எதிர்காலத்தை வடிவமைத்தல்’  நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனின் பாரம்பரியத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட க்ஸாசிஸ் 220எல்சி அல்ட்ரா பெரம்பலூரில் வாடிக்கையாளர்கள், டாடா ஹிட்டாசி மற்றும்  ராம்பாக் எக்யூப்மெண்ட் அண்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் (அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் கூட்டாளி)  மூத்த நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிரூபிக்கப்பட்ட நீடித்த ஆயுட்காலம் மற்றும் செயல்திறனுடன் மேம்படுத்தப்பட்ட  இந்த இயந்திரம், உயர்தரக் கட்டுமானக் கருவிகளை வழங்குவதில், டாடா ஹிட்டாச்சியின் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து நிலைநிறுத்துகிறது. நம்பகமான மற்றும் முன்னோக்கியத் தீர்வாக, அல்ட்ரா எந்திரம்,  தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.  அதிக எரிபொருள் திறன், குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் அதிக மறு-விற்பனை மதிப்பு ஆகிய சிறப்பம்சங்களுடன், புத்தம் புதிய க்ஸாசிஸ் 220எல்சி அல்ட்ரா எந்திரம், சம்மந்தப்பட்ட பிரிவில், வாடிக்கையாளர்கள் முதலீட்டின் மீது அதிக வருமானத்தை வழங்க உறுதியளிக்கிறது.

அறிமுக விழா பற்றி டாடா ஹிட்டாச்சி சந்தையியல் - பொது மேலாளர் பி.கே.ஆர்.பிரசாத் கூறுகையில் ‘டாடா ஹிட்டாச்சி தயாரிப்பு வரிசையில் இந்தப் புதிய எந்திரத்தின் சேர்க்கை, புதுமைக்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கும், அகழ்தலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நிறுவனத்திற்குள்ள அர்ப்பணிப்பிற்குச் சான்றாகும்.   க்ஸாசிஸ் 220எல்சி அல்ட்ரா எந்திரம் தொழிற்துறை தரங்களை உயர்த்தவும், சிறந்து விளங்கப் புதிய பெஞ்ச்மார்க் வரையறைகளை அமைக்கவும் உறுதியளிக்கிறது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form