பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோரை வளர்ப்பதில் எம்எஸ்எம்இகளின் முக்கிய பங்கை அங்கீகரித்து, புதுச்சேரியில் சிறு வணிகங்களுக்கான முக்கிய உதவியாளராக ஜஸ்ட்டயல் உருவெடுத்துள்ளது. வணிகர்களுக்கு விரிவான தளம் வழங்கி நெட்வொர்க்கை மேம்படுத்துவதன் மூலம், இந்த தளம் எம்எஸ்எம்இ-களுக்கு அவர்களின் பார்வையை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் மற்றும் பல்வேறு துறைகளில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் உதவுகிறது. அதன் புதுமையான தீர்வுகள் மற்றும் இணையற்ற அணுகல் மூலம் புதுச்சேரியில் எம்எஸ்எம்இ-களை ஆதரித்து, தொழில் முனைவோர் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது ஜஸ்ட்டயலின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
தனது வெற்றிக் கதையைப் பகிர்ந்துகொண்ட ஜி.ஆர்.கோல்டு நிறுவனத்தைச் சேர்ந்த சக்திவேல், “கடந்த 6 வருடங்களாக தங்கம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் துறையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆரம்பத்தில், ஜஸ்ட்டயலில் பதிவுசெய்து, பாண்டிச்சேரி கிளைக்கு விளம்பரம் செய்தோம். மதிப்புமிக்க கருத்துக்கள் மற்றும் ஏராளமான முன்னேற்றங்கள் இருந்தது. இந்த வெற்றியால் உற்சாகமடைந்து பல மாவட்டங்களை உள்ளடக்கி எங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தினோம். மீண்டும், எங்களது புதிய கிளைகளை விளம்பரப்படுத்த ஜஸ்ட்டயல் தளத்தைப் பயன்படுத்துகிறோம். இதன் விளைவாக பல நிலையான வாடிக்கையாளர்கள் வருகை ஏற்பட்டது. இந்த அனுபவம் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை எங்களுக்கு வழங்கியுள்ளது, மேலும் வணிக வாய்ப்புகளை ஆராய எங்களை ஊக்குவிக்கிறது” என்றார்.
போட்டி நிறைந்த விருந்தோம்பல் துறையில் ஜஸ்ட்டயலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 'தி ரூம்லி'யின் நிறுவனர் யுவராஜ் பேசுகையில், “எனது வணிகத்தின் வெற்றி, முன்பதிவு மற்றும் வருவாயின் முதன்மை ஆதாரமாக விளங்குவதில் ஜஸ்ட்டயல் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஜஸ்ட்டயலைப் பயன்படுத்துவதன் முக்கிய நன்மைகளில் ஒன்று, விருந்தினர்கள் வருகைக்கு முன் நேரடியாக அவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஆகும். இது வாடிக்கையாளர்களின் விருப்பத்தேர்வுகள் மற்றும் தேவைகளை நன்கு புரிந்துகொள்ள அனுமதிக்கிறது. மேலும் அவர்கள் மீண்டும் வாடிக்கையாளர்களாக திரும்புவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது” என்றார்.