ரசிகர்களை உற்சாகப்படுத்த கோவையில் ஐபிஎல் ஃபேன் பார்க்
கிரிக்கெட், விளையாட்டு வீரர்கள், விருப்பமான அணிகள் மற்றும் பலவற்றின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வெறித்தனமான ரசிகர்களுடன்  ஐபிஎல் 2024 ஃபேன் பார்க்குகளின் ரசிகர்களை கொண்டு வருகிறது. 50 நகரங்களில் உள்ள ரசிகர்களைத் தொட்டு இந்த ஃபேன் ஃபார்க்குகள் ஐபிஎல் உற்சாகத்தை நாடெங்கும் எடுத்துச் செல்ல தயாராக இருக்கின்றன. கோவையில் இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் இன்று மதியம் 01.30 முதல் கதவுகள் திறக்கப்படும். டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ; குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அண்ட் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியைக் காணலாம்.

ஒவ்வொரு பிரம்மிப்பூட்டும் தருணத்தையும், ஒவ்வொரு இடத்திலும் பிரம்மாண்டமான திரைகளில் நேரடியாக ஒளிபரப்பி ரசிகர்களுக்கு ஸ்டேடியத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை வழங்குகிறது. இதை எந்த ரசிகரும் தவற விட முடியாது. ஏனெனில் இதற்கு நுழைவுக்கட்டணம் முற்றிலும் இலவசம். அங்குள்ள இசை, வணிகப் பொருட்கள், உணவுக் கடைகள், பானங்கள் மற்றும் ஐபிஎல்-ன் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்களில் சில வேடிக்கை செயல்கள் போன்றவை இங்கு வேடிக்கை மற்றும் உற்சாகத்தை இரட்டிப்பாக்கும்.

ஒவ்வொரு சீசனும் முன்பை விட பெரிதாக இருக்கிறது. இம்முறை 10 இலட்சத்திற்கும் மேலான கிரிக்கெட் ரசிகர்கள், இந்த ஃபேன் பார்க்குகளில் வெறித்தனமான உற்சாகத்தை அனுபவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என டாடா ஐபிஎல் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form