சேலம் பாவை பொறியியல் கல்லூரியில் மேற்கத்திய பாணியில் ஒபேரா நிகழ்ச்சி



சேலம் பாவை பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு 2000 மாணவர்களுக்காக, தமிழகத்திலேயே முதன் முறையாக  " ஒபேரா எனும் மேற்கத்திய பாணியில்" சிறப்பு நிகழ்ச்சி தனது மாணவர்களுக்காக பிப்ரவரி 10 அன்று நடத்தியது. இது பயிற்சி பயிலரங்கம் என்பதை தாண்டி, "ஒபேரா"  எனும் வகையான புதுமை நிகழ்ச்சி ஆகும்.  இதன் தலைப்பு "யுவர் லைஃப் ; யுவர் டிசைன்” (வாழ்க்கையை வாழப்பார், அல்லது வார்க்கப்பார்). இறுதி ஆண்டு மாணவர்கள், கல்லூரி வாழ்க்கையை முடித்து, இந்த சமூகத்தில் "இரண்டாவது பிறவி" எடுக்கிறார்கள். அந்த நிலையில், வாழ்க்கை ஒரு பெரிய கேள்வி குறியாக இருக்கும். 

மாணவர்கள் அகம் மற்றும் புற வாழ்க்கையில் தன்னை அமைத்துக் கொள்வது என்பதைப் பற்றியும், எப்படி இவற்றை உள்ளடக்கி வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வது பற்றியும், பல்வேறு அனுபவ நிகழ்வுகளை சொல்லி, சுமார் இரண்டரை  மணி நேர தனிஆவர்த்தன நிகழ்ச்சி மிகப் பிரமாண்டமான எல்இடி வால் என்கிற பின்னணியில் நடைபெற்று மெய்சிலிர்க்க வைத்தது.

இதற்காக சிறப்பு பேச்சாளராக "ஜோஷ் டாக்" புகழ், மற்றும் தனிமனித வாழ்வியல் படைப்பாளர், ஜேஸி இயக்கத்தின் தேசிய பயிற்சியாளரும், முன்னாள் தேசிய துணைத்தலைவரும், தி 1234 அறக்கட்டளையின் நிறுவனருமான, "இதுதான் வெற்றி" என்கிற நூலின் ஆசிரியுருமான பி.ஜி. ராஜன்  கலந்து கொண்டார். வாழ்க்கையை எத்தனை அங்கங்களாக பிரிக்கலாம், அந்த ஒவ்வொரு அங்கத்திலும் எப்படி தம்மை மேம்படுத்திக் கொள்ளலாம் என பத்து, பத்து கட்டளைகளாக பிரித்து, நூதன தொழில்நுட்ப வசதிகளுடன், இந்த நிகழ்ச்சி மிகப் பிரமாண்ட அளவில் நடத்தப்பட்டது.

இதைப் பற்றி பேசிய நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியின் பல சிறப்புகளை எடுத்துரைத்தனர். அவர்கள் பேசுகையில், இந்த நவீன தொழில் நுட்ப காலத்தில் அதற்கேற்ப மாணவர்களுக்கு அளிக்கும் போது, மிக மிக இலகுவாக மாணவர்களை ஊடுருவிகிறது. பல நூல்களையும், காப்பியங்களையும், படித்து அறிய வேண்டிய விஷயங்களை அதன் சாராம்சத்தை, இன்றைய கால மாணவர்களின் விருப்பத்திற்கேற்பவும், கலந்துரையாடல் என்பதற்கும் வாய்ப்பளித்து, ஒரு சினிமாவைப் போல வடிவமைத்து தரப்பட்ட நிகழ்ச்சி. கல்வியை தாண்டி பட்டறிவை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது” என்றனர்.

நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த மாணவர்கள், “இந்த தலைப்பிற்கேற்ற கருத்தாக்கப் பாடல் மிக நன்றாக இருந்தது" இந்த வகுப்பு, பயிற்சி என்பதை விட பேச்சு என்பதை விட நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆறு அங்கங்களாக பிரித்து சொன்னது புதிய அணுகுமுறை. பயிற்சியாளர் நடத்திய விதம் மிகவும் அற்புதம். அவரது உடல் மொழி, குரல் வளம், துல்லியமான கருத்துகள் மிக சிறப்பு. ஒவ்வொரு மாணவனும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய திட்டம். ஒரு சினிமா பார்ப்பது போல, நேரம் போனதே தெரியாமல் அவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது” என்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form