உற்பத்தி துறையில் கவனம் செலுத்தும் கனரா ரோபெகோ

இந்தியாவின் இரண்டாவது பழமையான மியூச்சுவல் ஃபண்டான ‘கனரா ரோபெகோ மியூச்சுவல் ஃபண்ட்’ - ‘கனரா ரோபெகோ மேனுஃபேக்ச்சரிங் ஃபண்ட்’ என்கிற என்எஃப்ஒ அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. உலகின் அடுத்த உற்பத்தி மையமாக மாறுவதற்கு இந்திய நாட்டிற்கு உள்ள திறனை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. இந்த ஃபண்ட் ஒரு திறந்தநிலை வாய்ப்பினை அளிக்கும் ஒப்பன்-எண்டட்  ஈக்விட்டி திட்டமாகவும், இந்தியாவின் உற்பத்தித் தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இருக்கும். 

மேலும், எஸ்அண்ட்பி, பிஎஸ்இ இந்தியா மேனுபேக்சரிங் டிஆர்ஐ-உடன் பெஞ்ச்மார்க் செய்யப்படும். வருகின்ற பிப்ரவரி 16, 2024 அன்று துவங்கப்படவுள்ள இந்த என்எஃப்ஒ, உற்பத்தித் துறைக்கு பிரத்யேக ஒதுக்கீட்டை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.  பின்னர், மார்ச் 01, 2024 வரை இந்த என்எஃப்ஒ, விண்ணப்பிக்க திறந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனியர் ஃபண்ட் மேனேஜர், பிரணவ் கோகலே; மற்றும் கனரா ரோபெகோ ஏஎம்சி-ன் ஹெட் ஈக்விட்டிஸ்,  ஸ்ரீதத்தா பந்த்வால்தார் ஆகியோர் இந்த ஃபண்டின் நிதி மேலாளர்களாக உள்ளனர்.

"இந்தியாவில் நடுத்தர பொருளாதார நிலையில் உள்ளவர்கள், மற்றும் உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த முக்கிய தருணத்தில் கனரா ரோபெகோ மேனுஃபேக்ச்சரிங் ஃபண்ட் நிதிச் சந்தைக்குள் அடியெடுத்து வைக்கிறது. முன்னேற்றமடைந்து வரும் உள்நாட்டு தேவை, சாதகமான கொள்கை சீர்திருத்தங்கள், வலுவான மற்றும் குறைக்கப்பட்ட பெருநிறுவன இருப்புநிலை அறிக்கை (பேலன்ஸ்ஷீட்) மற்றும் நிலையான அரசியல் சூழல் போன்றவற்றின் காரணமாக இந்த ஃபண்டில் முதலீடு செய்வது நன்கு நிறுவப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும்” என்று கனரா ரோபெகோ மியூச்சுவல் ஃபண்டின் தலைமை செயல் அலுவலர் ரஜ்னிஷ் நருலா தெரிவித்தார்.


இந்த என்எஃப்ஓ ஃபண்ட் மூலம், இந்தியாவின் மேம்படும் உற்பத்தி வளர்ச்சியின் வரலாற்றில் ஒரு பகுதியாக மாறுவதற்கான வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறோம். உற்பத்தி துறையின் போக்கு மற்றும் அதிலுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்துவது, அதனோடு தொடர்புடைய இதர துறைகளில் முதலீடு செய்வது, உற்பத்தி என்கிற விஷயத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களுடன் வளர்ச்சியை நோக்கிய ஒரு அறிவார்ந்த யுக்தியை இந்த ஃபண்ட் பின்பற்றும்" என்று கனரா ரோபெக்கோவின், ஹெட் ஈக்விட்டீஸ், ஸ்ரீதத்தா பந்த்வால்தார் கூறினார்.

ஏற்ற இறங்களை அனுசரித்து ஏற்கும்  முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் உகந்ததாக இருக்கும். மேலும், சிறந்த ரிஸ்க்-ரிட்டர்ன் வர்த்தகத்தை எதிர்நோக்கிய ஃபண்டாகவும் இருக்கும்.  இந்த ஃபண்ட் குறைந்தபட்சம் 80 சதவிதம் உற்பத்தி துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குகளிலும் முதலீடு செய்யும்; 0 முதல் 20 சதவிதம் வரை ஈக்விட்டி மற்றும் உற்பத்தி அல்லாத மற்ற நிறுவனங்களின் ஈக்விட்டி தொடர்பான முதலீடுகளிலும், 0 முதல் 20 சதவிதம் வரை கடன் மற்றும் கடன் சந்தை முதலீடுகளிலும், ஆர்இஐடி மற்றும் இன்விட்-கள் வழங்கும் யூனிட்களில் 0 முதல் 10 சதவிதம் வரையும் முதலீடு செய்யும். இந்த ஃபண்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000 ஆக இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form