ஓரியண்ட்பெல்லின்100 சதவிகிதம் டைல்ஸ் மற்றும் 0 சதவிகிதம் பிரபலங்கள் பிரச்சாரம் துவக்கம்

 


பிரபலங்களின் பளபளக்கும் கவர்ச்சி பிரச்சார விளம்பரங்களிலிருந்து விடுபடும் வகையில், ஓரியண்ட்பெல் டைல்ஸ் தனது சமீபத்திய விளம்பரப் பிரச்சாரம் மூலம் ஓர் அசாதாரண பயணத்தைத் தொடங்க உள்ளது.  பிரபலங்களின் செல்வாக்கு பிராண்ட்களைத் தாங்கிப் பிடிக்கும் காலத்தில், ஓரியண்ட்பெல் டைல்ஸ் இந்த பிம்பத்தை மாற்றி எழுதுகிறது.

  100 சதவிகிதம் டைல்ஸ் மற்றும் 0 சதவிகிதம் பிரபலங்கள் என்ற தலைப்பிலான எதிர்வரும் பிரச்சார விளம்பரம், டைல்ஸ்கள் பற்றி மட்டுமல்ல. இது பிரச்சார விளம்பரத்திலுள்ள நம்பகத்தன்மை தொடர்பான சாராம்சத்தின் பிரதிபலிப்பாகும். பொருளின் மதிப்போடு, பிரபலத்தின் புகழைச் சமன் செய்யும் வழக்கமான விதிமுறைக்குச், சவால்விடும் நிலைப்பாட்டை எடுக்கிறது.

பிரபலங்களின் பெயரை விளம்பரப் பிரச்சாரத்தில் பயன்படுத்தாமல், உரையாடல்கள் மூலம் பொருளின் சிறப்பை விளக்குவதுடன், வாடிக்கையாளர்  மகிழ்ச்சியையும் தூண்டுகிறது. காட்சிகளும், செய்திகளும், பிரபலங்களை அடிப்படையாகக் கொள்ளாமல், பிராண்டின் சாராம்சத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுக்க நுகர்வோரை ஈடுபடுத்தி, சிந்தனையைத் தூண்டி, ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.  இப்பிரச்சாரம் வழக்கமான விதிமுறைகளுக்குச் சவால்விடுவதுடன், பிரபலங்களைத் தாண்டி பிராண்டை உருவாக்கும் பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறியவும் ஊக்குவிக்கின்றன.

எங்கள் நுகர்வோரில் 25 சதவிகிதம் மட்டுமே, பெரும்பான்மைப் பிரபலங்கள் தாங்கள் பிரச்சார விளம்பரப்படுத்தும் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என நம்புகின்றனர்.  50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், பிரபலங்கள் பிரச்சார விளம்பரப்படுத்தும் பொருள்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டுமென விரும்புகின்றனர். 

எண்ணற்ற பிரபலங்களின் பிரச்சார விளம்பரரங்களின் பின்னணியில் உள்ள நம்பகத்தன்மையைக் கருத்தில் கொள்ள, 100 சதவிகிதம் டைல்ஸ் மற்றும் 0 சதவிகிதம் பிரபலங்கள் பிரச்சார விளம்பரமானது, தற்போதைய நிலையைக் கேள்விக்கு உட்படுத்தும்  அழைப்பிதழாகும்.

‘இன்று நாங்கள் ஒரு துணிச்சலான அறிக்கையை வெளியிடுகிறோம்.  பிரபலங்களின் பிரச்சார விளம்பரங்களோ, ஆழமற்ற சந்தைப்படுத்தும் வித்தைகளோ கிடையாது.  ஓரியண்ட்பெல் டைல்ஸ் தனது சொந்தத் தகுதியில் பெருமையுடன் நிற்கும். தரை மற்றும் சுவர் டைல்ஸ் வாங்குவதை எளிமையாக்கும். இந்த பிரச்சார விளம்பரம் எங்கள் பிராண்டைப் பற்றியது மட்டுமல்ல. இன்னும் சற்று விரிவான உரையாடலைப் பற்றியது -   மேலோட்டமான கவர்ச்சி மற்றும் உண்மையான பொருளுக்கும் இடையேயான தேர்வு’ என்கிறார் ஓரியண்ட்பெல் டைல்ஸ் முதன்மைச் சந்தையியல் அதிகாரி அலோக் அகர்வால்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form