மோட்டோரோலா 2024 ஆம் ஆண்டின் பேன்டோன் வண்ணமான பீச் ஃபஸ் வண்ணத்தில் அறிமுகமாகும் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 40 நியோஇந்தியாவின் மிகச்சிறந்த  5ஜி ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா மற்றும் உலகளாவிய அளவில் வண்ணங்களுக்கு அதிகாரபூர்வ மையமான பேன்டோன் இரு நிறுவனங்களும், பேன்டோன் கலர் ஆஃப் தி இயர்  வண்ணங்களில் கருவிகளை உருவாக்கும் முயற்சியில்   தொடர்ந்து இரண்டாவது  ஆண்டாக ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான வண்ணமாக பேன்டோன்13-1023 பீச் ஃபஸ் ஐ தேர்ந்தெடுத்த பேன்டோன் கலர் ஆஃப் தி இயர் திட்டம்,  அதன் 25 ஆவது ஆண்டு நிறைவை அடையாளப்படுத்துகிறது.  

இந்த புதிய பேன்டோன் கலர் ஆஃப் தி இயர்  பேன்டோன்13-1023 பீச் ஃபஸ், மோட்டோல்ரோலாவின் தூண்களாக விளங்கும், உள்ளடக்கல், மற்றும் அனைவரும் மேலும் எளிதாக அணுகும் வகையில் தொழில்நுட்பத்தை வழங்குதல் ஆகியவற்றோடு அழகாக இணக்கமாக ஒழுங்கமைந்துள்ளது. மனித இன தொடர்புகளின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கருவிகளைப் போலவே இந்த வண்ணமும் செயல்படுவதை பிரதிநிதித்துவப்படுத்த  உலகின் 1 ஆவது ஸ்மார்ட்போன் வெளியீடுகளாக மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மற்றும் மோட்டோரோலா எட்ஜி 40 நியோ ஃபோன்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளன.  

காண்போரின் கண்ணைக் கவரும்  புதிய மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா அசல் விலை ரூ. 79,999, தனிப்பட்ட கால வரையறையுடனான தள்ளுபடி விலை ரூ. 69,999-க்கும், மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ  8ஜிபி + 128ஜிபி வகை ரூ. 22,999 மற்றும்  12ஜிபி + 256ஜிபி வகை ரூ. 24,999க்கும்  ஃப்ளிப்கார்ட், மோட்டோரோலா.இன் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில்  ஜனவரி 12, 2024 முதல்  கிடைக்கும். இன்னும் மலிவு விலையில் மற்றும் எளிதாக அணுகக்கூடிய வகையில் நுகர்வோருக்கு வழங்க  மோட்டோரோலா மாதத்திற்கு வெறும் ரூ.7,778 தொடங்கி 3, 6 மற்றும் 9 மாதங்களுக்கு எந்த ஒரு இதர கட்டணமுமில்லாமல் இஎம்ஐ சலுகைகளை முன்னணி வங்கிகளிடமிருந்து பெற்றுத் தருகிறது.

மோட்டோ அன்பிளக்ட் மற்றும் ஃபேமிலி ஸ்பேஸ் போன்ற பல்வேறு மென்பொருட்களையும் மோட்டோரோலா வழங்குகிறது. ஆய்வுகள்  மற்றும் நுண்ணறிவுகளின் பின்புலத்தின் ஆதரவோடு நுகர்வோர் தொலைபேசிகள் மூலமான கவனச்சிதறல்களில் இருந்து விலகி சற்று ஓய்வெடுக்க உதவும் வகையில் மோட்டோ அன்பிளக்டை மோட்டோரோலா அறிமுகப்படுத்தியிருக்கிறது. நமது கருவிகளிடமிருந்து கவனத்தோடு சற்று விலகி சென்று நமக்கான நேரத்தைசெலவிடவும்  அதேசமயம் அருகாமையிலிருப்போருடனும் நேரத்தை செலவிட வேண்டியதின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு இந்த அம்சம் வழங்கப்படுகிறது.  ஃபேமிலி ஸ்பேஸ் அம்சம், ஒரு மோட்டோரோலா பயனர் தொலைவிலிருந்தபடியே ரிமோட் வழிகாட்டுதல்களுக்காக குறிப்பிட்டசில ஆப்களின் இடைமுகத்தைத் தேர்ந்தெடுத்து, பேரண்டல்கண்ட்ரோலை இயக்கவும், மற்ற மற்ற பிற பயனர்களின்  பயன்பாட்டு நேரத்தை குறிப்பாக குழந்தைகளின் பயன்பாட்டு நேரம் நிர்வகிக்கவும், உதவுகிறது.  

தொடர்புகள் மற்றும் கூட்டாண்மைக்கென்றே கட்டமைக்கப்பட்ட பீச் ஃபஸ் வண்ணத்திலான புதியமோடோரோலா ரேசர் 40 அல்ட்ரா  நவீன பாணியிலான  மற்றும் தங்களை சிறப்பாக  வெளிப்படுத்திக் கொள்ளும் நபர்களை கூட்டத்திலிருந்து தனித்துக் காட்சியளிக்கச் செய்கிறது. இது மடக்கும் வடிவமைப்புடன், வேகமான 144ஹர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 1100நிட்ஸ் உச்ச பட்ச பிரகாசத்துடன் கூடிய  உலகின் மிகப்பெரிய வெளிப்புற 3.6-இன்ச் போலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஃபிளிப் ஃபோன் மடிக்கும்போது மிக மிக மெலிதானது மற்றும் இத்  தொழில்துறையின் 1 ஆவது டியூயல் ஆக்ஸிஸ் டியர் டிராப் ஹிஞ்ச் வடிவமைப்பின் காரணமாக இடைவெளியில்லாததாகவும் , பல நெகிழ்வான கோணங்களில் இந்த ஃபோன் எல்லையில்லா  நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.  

ஃபோன் திறக்கப்படும் போது, 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 1400நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் கிட்டத்தட்ட 6.9 இன்ச் அகல க்ரீஸ்லெஸ் டிஸ்ப்ளேயை காட்சிப்படுத்துகிறது.  தனித்துவமான அடையாளம் கொண்ட இந்த  ஃபிளிப் ஃபோனில் தடையற்ற பயனர்  அனுபவத்தை உறுதி செய்யும் வகையில்  ஆற்றல் மிக்க ஸ்நாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஒசி பொருத்தப்பட்டுள்ளது.  ரேசர் 40 அல்ட்ரா தலைமுறைகளைக் கடந்து, கவனத்தை ஈர்த்து,  இசைவிணக்கமான 2024 பான்டோன் கலர் ஆஃப் தி இயர்  இன் முன்மாதிரியாக விளங்குகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ வண்ணத்தை வடிவமைப்பின் மையமாகக் கொண்டுள்ளது. வேகன் லெதரில் அடங்கியுள்ள பேன்டோன் பீச் ஃபஸ் வண்ணச்சாயல், இந்த ஃபோனின் இதமான வளைந்து நெளிந்த வடிவமைப்புக்கு கூடுதல் அழகை அளிக்கிறது.  நீர் எதிர்ப்புத் திறனில்  ஐபி68 தரப் பாதுகாப்புடன் கூடிய இந்த5ஜி ஃபோன் உலகின் மிக மிக எடை குறைவான ஸ்மார்ட்ஃபோன் ஆகும் மற்றும்  தூசி, அழுக்கு, மணல் ஏன்  1.5 மீட்டர் சுத்தமான நீரில் 30 நிமிட நீரில் மூழ்க வைத்திருந்தாலும் எதையும் உட்புகவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், ஒரு பில்லியன் வண்ணங்கள் மற்றும் மனதுக்கு நிறைவான  உச்சபட்ச  பிரகாசத்துடனான அதன் வளைவான  144ஹர்ட்ஸ் 6.55-இன்ச் போலெட் டிஸ்ப்ளே 144ஹர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் நிறைவு செய்யப்பட்டு கூடுதல் திறன் பெறுகிறது.   

 இது அதன் யுஐ செயல்பாடுகளைய்  எந்ததடையுமில்லாமல் மிக மிக ஸ்மூத் ஆக நடைபெறச்  செய்கிறது. செயல்திறனில் உலகின் முதலிடத்திலுள்ள மீடியா டெக் டைமென்சிட்டி 7030 அதிமின்னல் வேக ப்ராசஸரைப் பெருமிதத்துடன் கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஒரு ஆற்றல் மிக்க செயலகமாக அமைந்துள்ளது. இந்த 6என்எம் சிப்செட் இது நம்பமுடியாத வேகத்திற்கான  வைஃபை 6இ- ஐ ஆதரிக்கும் மற்றும் ஒரு சிறந்த கேமிங் அனுபவத்திற்கான  மீடியா டெக் ஹைபர் இன்ஜின் கேம் தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form