ஸ்கோடா ஆட்டோ இந்தியா 2 ஆண்டுகளில் 1,00,000 கார்களை விற்பனை செய்துள்ளது

ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது விற்பனை வேகத்தைத் தக்கவைத்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,00,000 கார்களை விற்பனை செய்து முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய இரண்டு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை இந்திய சந்தைக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்திய நிறுவனத்தின் இந்தியாவை மையமாகக் கொண்ட தயாரிப்பு உத்திக்கு இது ஒரு வலுவான சான்றாகும். 

இந்த இரண்டு மாடல்களும் இந்த மைல்கல்லை அடைவதில் முக்கிய பங்கு வகித்தன, இதற்கு முன்னர் இந்த மைல்கலலை அடைய நிறுவனத்திற்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும். ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் ஸ்கோடா 48,755 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், ஸ்கோடா ஆட்டோ வியட்நாமில் நுழைவதில் நிறுவனத்தின் புனே ஆலையில் இருந்து தயாரிப்புகள், பாகங்கள் மற்றும் கூறுகள் முக்கிய பங்கு வகிக்கும். நிறுவனம் பல தயாரிப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய தயாரிப்பு அறிவிப்புகளைக் கொண்டுள்ளது.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 53,721 கார்களின் விற்பனையை பதிவு செய்த 2022 ஆம் ஆண்டின் சாதனை ஆண்டைத் தொடர்ந்து 48,755 விற்பனையை பதிவு செய்துள்ளது. 2022 ஐ விட 100 சதவிகித முன்னேற்றத்தை பதிவு செய்து, அதன் உச்சபட்ச வருடாந்திர விற்பனைக் கொள்ளளவைப் பதிவுசெய்துள்ளது. இந்தியா ஸ்கோடா ஆட்டோவிற்கு ஒரு முக்கிய சந்தையாகவும், ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகவும் தொடர்கிறது. 

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 120 வாடிக்கையாளர் தொடுப்புள்ளிகளில் இருந்து, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 260 தொடு புள்ளிகளுடன் ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக வளர்ந்துள்ளது.  அக்டோபர் 2022 இல், குளோபல் என்சிஎபி-யின் புதிய, கடுமையான சோதனை நெறிமுறைகளின் கீழ் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்ட முதல் தயாரிப்பாக குஷாக் மாறியது மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முழு 5-நட்சத்திரங்களைப் பெற்றது. இந்த போக்கு 2023 இல் தொடர்ந்தது, ஏப்ரல் மாதத்தில் ஸ்லாவியா அதே சாதனையை அடைந்தது.

விற்பனை செயல்திறன் குறித்து பேசிய ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் டைரக்டர் பெட்ர் ஜெனிபா, “ 2023ல் எங்களது முயற்சிகள் தொடர்ச்சியாக எங்கள் நிலையை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.ஆண்டின் முதல் பாதியில் விநியோகச் சவால்கள் இருந்தபோதிலும், 2023 இன் கடைசி காலாண்டை நேர்மறையான குறிப்பில் முடித்திருப்பதை உறுதி செய்துள்ளோம். 2024 ஆம் ஆண்டில், தற்போதைய வரம்பில் அற்புதமான தயாரிப்பு நடவடிக்கைகள், புதிய தயாரிப்பு அறிவிப்புகள், ஏற்றுமதிகள் மூலம் எங்கள் வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் கலவையை நாங்கள் பெற்றுள்ளோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form