ஸ்கோடா ஆட்டோ இந்தியா 2024 ஜனவரி 1 முதல் தனது அனைத்து வாகனங்கள் மீதும் 2 சதவிகிதம் விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு அனைத்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா வாகனங்களுக்கும் - குஷாக் எஸ்யூவி, ஸ்லேவியா சேடன் மற்றும் கோடியாக் லக்ஸரி 4x4 ஆகியவற்றுக்குப் பொருந்தும். விநியோகம், உள்ளீடு மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன், ஸ்கோடா தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாவதுடன், உயர்தரப் பொருள்களையும் வழங்கும்.
2021 ஜூலையில் இந்தியாவில் பிரத்யேகமாக உருவான புத்தம் புதிய எம்க்யூபி-ஏஓ-ஐஎன் தளத்தில் தயாரான புதிய குஷாக் வாகனம் அறிமுமானது. 2022 ஏப்ரலில் அறிமுகமான ஸ்லேவியா சேடன் வாகனமும் அதே தளத்தில் தயாரானதுதான். தற்போது இவ்விரு மகிழுந்துகளும் ஜிசிசி மற்றும் வலது பக்கம் ஓட்டும் வசதி கொண்ட சந்தைகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. 2024இல் இந்நிறுவனம் வியட்நாம் சந்தையிலும் தடம் பதிக்கும்.
குஷாக் மற்றும் ஸ்லேவியா ஆகிய இரு மகிழுந்துகளும், அவற்றில் பயணிக்கும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான, முழு 5 நட்சத்திர தர மதிப்பீட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளன. குளோபல் என்சிஏபி-இன் புதிய, கண்டிப்பான, க்ராஷ் பரிசோதனைகளுக்கு உட்பட்டு இத்தர மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. யூரோ என்சிஏபி வழங்கும் 5 நட்சத்திர தர மதிப்பீட்டுச் சான்றிதழைக் கோடியாக் பெற்ற நிலையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா அதன் 100% க்ராஷ் பரிசோதிக்கப்பட்ட கார்களுக்கும் 5 நட்சத்திர தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.