தூத்துக்குடி மக்களுக்கு உதவும் டிவிஎஸ் மோட்டார்ஸ்

 தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் எதிரொலியாக, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சேவை முகாமை நடத்துகிறது. விரிவான காப்பீடு அம்சங்கள் உள்ள காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் முழுமையாக இல்லாத வாடிக்கையாளர்கள் அல்லது தங்களின் வாகன காப்பீட்டை மீண்டும் புதுப்பிக்காத வாடிக்கையாளர்களுக்கு இந்த இக்கட்டான சூழலில் உதவுவதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த சேவை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை முகாம்   டிசம்பர் 22, 2023 மற்றும் ஜனவரி 1, 2024 -க்கு இடையில் திட்டமிடப்பட்டுள்ளது.

உடனடியாக பார்த்தே ஆகவேண்டிய சூழலில் இருக்கும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட பழுது சரிப்பார்ப்பு, ஐசிஇ மற்றும் மின்சார வாகனங்கள் என இந்த இரு பிரிவு வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் இல்லாவிட்டாலும், வெள்ளம் தொடர்பான பழுது சரிபார்ப்புகளுக்கான இலவச லேபர் சர்வீஸ் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இயக்க முடியாமல் இருக்கும் வாகனங்களை அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டிவிஎஸ் மோட்டார் சேவை மையத்திற்கு இழுத்துச் செல்லும் வசதி ஆகிய உதவிகளை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு, அவசியமான பழுது சரிப்பார்க்கும் பணிகளை துரிதப்படுத்தம் வகையில் கூட்டு செயல்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சேவை முகாமில், வெள்ளம் தொடர்பான சேதங்கள் ஏதேனும் இருக்கிறதா என்றும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பழுது நீக்கும் பணிகள் இருக்கிறதா என்பதை கண்டறிய பல தகவல்களை அடங்கிய, முழுமையான வாகனச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு சாதகமான பங்களிப்பை உருவாக்கும் என்று உறுதியாக நம்புகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form