இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎப்சி லைஃப், ‘எச்டிஎஃப்சி லைஃப் க்ளிக் 2 அச்சீவ்’ எனும் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, உத்தரவாத சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும்.
இந்த திட்டத்தை உடனடி வருமானம், நீண்ட கால வருமானம், பணத்தை மொத்தமாகவோ அல்லது குறிப்பிட்ட பருவ இடைவெளிகளிலோ பெறும் வகையில் உங்களுக்கு ஏற்ற வகையில் பெற முடியும். உங்களுக்க ஏற்றபடி உறுதியளிக்கப்பட்ட தொகை மற்றும் கூடுதல் நன்மைகளுடன் விரும்பிய அளவிலான பாதுகாப்பை நீங்கள் தேர்வு செய்யலாம். அடுத்த பாலிசி மாதத்தில் இருந்தே உத்தரவாதமான உடனடி வருமானத்தை பெற முடியும். வருமானத்திற்கான வழியை அதிகரிப்பதன் மூலம் உங்கள் வருமானத்தில் ஏற்றபடும் பற்றாக்குறையின் தாக்கத்தை நீங்கள் குறைக்கலாம். உங்கள் வாழ்நாள் பாதுகாப்பு பலன்கள், சேமிப்பு வங்கி கணக்கு + 1.5 சதவிகிதம் வட்டி வீதத்தில் அதிகரிக்கும்.
எச்டிஎப்சி லைஃப் நிறுவனத்தின் புராடெக்ஸ் மற்றும் செக்மென்ட்களின் தலைவர் அனீஷ் கண்ணா பேசுகையில், ‘‘வாழ்க்கையில் அனைத்தும் ஒரு கனவிலிருந்து தொடங்குகின்றன, கனவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதை நனவாக்க - நீங்கள் ஒரு பாதுகாப்பான அடியை எடுத்து வைத்து தொடங்க வேண்டும். சரியான சேமிப்பு மற்றும் திட்டமிடல் மூலமாகவே வாழ்க்கை இலக்குகள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில், உங்கள் கனவுகளை நிறைவேற்ற, எச்டிஎப்சி லைஃப் கிளிக் 2 அச்சீவ் புராடெக்ட் மூலம் உங்கள் முதல் பாதுகாப்பான அடியை நீங்கள் இப்போது எடுத்து வைக்கலாம். இது, உத்தரவாதமான ரிட்டன் நன்மையுடன் உங்கள் கனவுகளை அடைய வரம்பற்ற விருப்பங்களை வழங்கும் திட்டமாகும்’’ என்றார்.