எக்ஸ்கான் 2023ல் மஹிந்திராவின் புதிய வழங்கல்கள் அறிமுகம்



 மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்திராவின் டிரக் மற்றும் பஸ் டிவிஷன், மற்றும் கன்ஸ்ட்ரக்சன் எக்யூப்மென்ட் டிவிஷன், எக்ஸ்கான் 2023 இல், புதுமை மற்றும் நம்பகத்தன்மைக்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அதன் சமீபத்திய வழங்கல்களை அறிமுகப்படுத்தியது. இந்த "நயா இந்தியா கா நயா  டிப்பர்" மஹிந்திரா ப்ளாசோ எக்ஸ் எம்-டியூரா மற்றும்  கட்டுமான உபகரணங்களின் புதிய சிஇவி5 வரம்பு ஆகியவை  அந்தந்த வகைகளில் மேம்பட்ட அம்சங்களையும் மற்றும் சமீபத்திய தொழில் விதிமுறைகளுக்கு இணங்குவதையும் வழங்குகின்ற  தரநிலைகளை மறுவரையறை செய்ய தயாராக உள்ளன.

பெங்களூர் இன்டர்நேஷனல் எக்ஸிபிஷன் சென்டர்-ல் உள்ள எம்டிபி ஸ்டால் ஒடி67 இல் மஹிந்திராவின் ரோட்மாஸ்டர் மற்றும் எர்த்மாஸ்டர் போன்ற பிஎஸ்வி கட்டுமான உபகரணங்களின் முழு வரம்பும் , ப்ளாசோ எக்ஸ் எம்-டியூரா 35 டிப்பர், ப்ளாசோ எக்ஸ் 28 ட்ரான்சிட் மிக்சர்,   6கேஎல் கொண்ட ஃப்யூரியோ 10 பியூயல் பவுசர் மற்றும் லோட் கிங் ஆப்டிமோ டிப்பர் போன்ற விரிவான டிரக் வரம்பும் காட்சிக்கு வைக்கப்பட்டன. மஹிந்திரா,  கட்டுமானத் தேவைகளுக்கு ஒரு பல்துறை தீர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஏற்றுதல் மற்றும் இழுத்துச் செல்லும் திறன் கொண்ட புதிய கருத்தாக்கமான லிஃப்ட் மாஸ்டர் காம்பாக்ட் கிரேனையும் காட்சிப்படுத்தியது.

ப்ளாசோ எக்ஸ் எம்-டியூரா  இந்தியாவில் டிப்பர் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது. அதன் நன்கு நிரூபிக்கப்பட்ட, உறுதியான மற்றும் நம்பத்தகுந்த தொகுப்புகளுடன், , 28டி மற்றும் 35டி ஜிவிடபிள்யு வகைகளில் கிடைக்கிற இந்த வரம்பு செயல்திறன் மற்றும் ஆயுள் ஆகியவற்றிற்கான புதிய தரநிலைகளை அமைக்கிறது. பயனர்களுக்கு அதிகபட்ச உற்பத்தித் திறனை உறுதி செய்வதற்காக, 36-மணி நேர டர்ன் அரவுண்ட் டைம் மற்றும் 48 மணி நேர இயக்க நேரத்தை வழங்கும் இரட்டை சேவை உத்தரவாதம், அதன் முதன்மை சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இது மஹிந்திரா ஐமேக்ஸ் மேம்பட்ட டெலிமாடிக்ஸ் உடன்,ஒரு காரை விட அதிகமாக  நவீன டிரான்ஸ்போர்ட்டருக்கு ஒரு முழுமையான தீர்வாக இருக்கிறது.  

எம்சிஇ சிஇவி5  வரம்பு, வரவிருக்கும் சிஇவி5 உமிழ்வு தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரோட்மாஸ்டர் ஜி100, உயர் சக்தி மோட்டார் கிரேடர் ஆகிய இரண்டு முக்கிய வழங்கல்களுடன் அறிமுகமானது. இதன் 102 எச்பி இன்ஜின் மற்றும் 440 என்எம் முறுக்குவிசை, குறிப்பாக மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், சாலை அமைப்பதில் ஒரு சிறந்த கிரேடராக  மாற்றுகிறது.இதன் 74 எச்பி எஞ்சின், ஒரு புதிய பெரிய மற்றும் மிகவும் சௌகரியமான கேபின் மற்றும் ஐமேக்ஸ் டெலிமாடிக்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பல்துறை பேக்ஹோ லோடெர் ஆக மேம்பட்ட  செயல்திறனை உறுதி செய்கிறது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் கமெர்சியல் வெஹிகிள்ஸ் இன் வணிகத் தலைவர் ஜலஜ் குப்தா இந்த நிகழ்வு பற்றி பேசுகையில், “ எக்ஸ்கான்-ல் ப்ளாசோ எக்ஸ் எம்-டியூரா டிப்பர் மற்றும் கட்டுமான உபகரணங்களின் புதிய சிஇவி5 வரம்பின் இந்த அறிமுகமானது, வணிக வாகனம் மற்றும் கட்டுமான உபகரணப் பிரிவில் மஹிந்திராவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.  எம்-டியூரா டிப்பர் அதன் நிரூபிக்கப்பட்ட மற்றும் உறுதியான தொகுப்புகளுடன் எங்கள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் நம்பகமான பங்காளியாக மாறத் தயாராக உள்ளது. இந்த புதிய சிஇவி5 வரம்பு என்பது அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே இந்த தயாரிப்புகளை தயார் செய்த எங்கள் பொறியாளர்களின் விரைவியக்கத்தின் விளைவாக இருக்கிறது.”என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form