குறைந்த எண்ணிக்கையில் அறிமுகமாகும் குஷாக் மற்றும் ஸ்லேவியா எலெகென்ஸ்

 


ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் குஷாக் மற்றும் ஸ்லாவியாவில்  புதிய மற்றும் பிரத்யேக எடிஷனை அறிவித்துள்ளது. எலெகென்ஸ்  என்று பெயரில், இரு மகிழுந்துகளும் குறைந்த அளவில் 1.5 டிஎஸ்ஐ இன்ஜின் திறனுடன் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும். குஷாக் எலெகென்ஸ் 1.5 டிஎஸ்ஐ மேனுவல் ரூ. 18,31,000/-க்கும் டிஎஸ்ஜி ரூ.19,51,000/-க்கும், ஸ்லேவியா எலெகென்ஸ் எடிஷன் 1.5 டிஎஸ்ஐ மேனுவல் ரூ.17,52,000க்கும் டிஎஸ்ஜி ரூ. 18,92,000க்கும் கிடைக்கும்.  புத்தம் புதிய எலெகென்ஸ் எடிஷன் 100 சதவிகித கிராஷ் பரிசோதிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் ஃப்ளீட்டுடன் இணைகிறது.

புதிய தயாரிப்பு நடவடிக்கை குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் சோல்க் பேசுகையில், ‘குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய இரண்டும் எலெகென்ஸ் எடிஷனில் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்படும். குஷாக் மற்றும் ஸ்லாவியாவில் கிளாசிக் கருப்பு நிறத்திற்கான தேவை அதிகம் உள்ளது.  புதிய எலெகென்ஸ் எடிஷன்களின் அழகியல், நிறம், வடிவமைப்பு மற்றும் அலங்கார அம்சங்கள் மிகுந்த மதிப்பையும்,  உரிமையின் பெருமையையும் தொடர்ந்து வழங்கும்’ என்றார்.

எலெகென்ஸ்  இரு மகிழுந்துகளிலும் கிளாசிக்கான, புதிய மற்றும் பிரமிக்க வைக்கும் டீப் பிளாக் பெயிண்ட்டை வழங்குவதுடன், க்ரோம் அம்சங்களையும் தக்க வைக்கிறது. மேலும், இரு மகிழுந்துகளிலும் அழகியலை மேம்படுத்தக் குரோம் லோயர் டோர் கார்னிஷ் மற்றும் பி-பில்லர்களின் மீது ‘எலெகென்ஸ்' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.  ஸ்லாவியா மகிழுந்தில் குரோம் டிரங்க் கார்னிஷ் மற்றும் ஸ்கஃப் பிளேட்டில் 'ஸ்லாவியா' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. குஷாக் மகிழுந்தில் உள்ள 17-இன்ச் விஇஜிஏ ட்யூயல் டோன் அலலாய் வடிவமைப்பு, அதன் ஸ்டைலையும், கரடுமுரடான நிலப்பரப்பிலும் நேர்த்தியாகச் செல்லும் திறனையும் உறுதிப்படுத்தும். ஸ்லேவியாவின் கிளாசிக் செடான் ரகங்களில் 16-இன்ச் விங் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன.

 எலெகென்ஸ் எடிஷனின் பயன்பாட்டையும், அழகியல் மைய நோக்கத்தையும் மேம்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களுக்குக் கவர்ச்சிகரமான டெக்ஸ்டைல் மேட்களும், எலெகென்ஸ் பிராண்ட் சீட் பெல்ட் குஷன்களும், நெக் ரெஸ்ட்களும் கிடைக்கும். இந்தப் பண்டிகைக் காலத்தில் குஷாக் மற்றும் ஸ்லேவியா மகிழுந்துகளில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், ஓட்டுனர் மற்றும் இணை ஓட்டுனருக்கு மின்சார இருக்கைகள், கால் வைக்கும் பகுதிகளில் ஒளிரும் விளக்குகள், ஸ்கோடா ப்ளே செயலியுடன் கூடிய 25.4 செமீ இன்ஃபோடெயின்மெண்ட் திரை,  ஆப்பிள் கார் ப்ளே , எலெகென்ஸ் எடிஷன் பூட் பகுதியில் 6 ஸ்பிக்கர்கள் மற்றும் சப் ஊஃபருடன் கூடிய ஸ்கோடா சவுண்ட் கருவிகளைக் காணலாம்.

குஷாக் மற்றும் ஸ்லேவியா மகிழுந்துகளின் எலெகென்ஸ் எடிஷன்கள் பிரத்யேகமாக 1.5 டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் மூலம் இயங்கும். இதற்கு இணையாக வாடிக்கையாளர்கள் 7 ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் அல்லது 6 ஸ்பீட் மேனுவலைத் தேர்ந்தெடுக்கலாம். 1.0 டிஎஸ்ஐ தயாரிப்புடன், எலெகென்ஸ் எடிஷனுக்காகப் பிரத்யேகமாக அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் 1.5 டிஎஸ்ஐ தயாரிக்கிறது. 1.5 லிட்டர் மேம்பட்ட இவிஓ ஜெனரேஷன் பவர்பிளாண்ட் மூலம் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 110கிவா (150 பிஎஸ்) ஆற்றலையும், 250 என்எம் டார்க் சக்தியையும் உருவாக்குகிறது.

இந்த எஞ்சினின் டர்போ சார்ஜரில் உள்ள வேரியபிள் வேன் ஜியோமெட்ரி, எஞ்சின் வேகத்துக்கேற்ப பரந்த அளவில் அதிக டார்க்கை உருவாக்குகிறது. சிலிண்டர் கிராங்க் கேஸில் உள்ள கேஸ்ட் இரும்பு லைனர்களுக்குப் பதிலாகச், சிலிண்டர் லைனர்களில் 0.15 மிமீ அளவுள்ள பிளாஸ்மா பூசப்படும். இது உள் உராய்வு, எரிபொருள் நுகர்வு மற்றும் கரி உமிழ்வைக் குறைக்கும். கம்பஸ்ஷன் சேம்பரில் சிறப்பான வெப்ப விநியோகம் மற்றும் சிதறல் மூலம், எந்திரத்தின் மீதான வெப்பச் சுமையையும் குறைக்கும்.  சம்மதப்பட்ட பிரிவில் முதல் முறையாக 1.5 டிஎஸ்ஐ-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பம் (ஏசிடி), குறைந்த சுமையின் கீழ் தானாகவே இரு சிலிண்டர்களை மூடுவதால்,  எரிபொருள் நுகர்வும், சிஓ2 உமிழ்வும் குறைகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form