ஜோய் ஆலுக்காஸின் புதிய நகை கலெக்‌ஷன் அறிமுகம்

 


35 ஆண்டுகால புகழ்பெற்ற பாரம்பரிய, மதிப்புக்குரிய இந்திய நகை பிராண்ட் ஆன ஜோய்லுக்காஸ், இந்த பண்டிகை காலத்தில் பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல் இந்தியாவுடன் ஆன நல்லுறவை ஜோய் ஆலுக்காஸ் வலுப்படுத்தி உள்ளது. அதில் பெண்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 'கிரேஸ் பை பிளாட்டினம் எவாரா' என்ற பிரத்தியேக ரகங்கள் உடனான புதிய பிளாட்டினம் நகைகளின் தொகுப்பை வெளியிட்டு உள்ளது. 

ஜோய் ஆலுக்காஸ் வெளியிட்டுள்ள இந்த நகைகளின் தொகுப்பு சமகால பெண்களின் மனநிலைகளை கொண்டு உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களின் உள்ளார்ந்த பாணியை, ரசனையை பூர்த்தி செய்யும் தனித்துவமான வடிவமைப்பு ரகங்களை இது உள்ளடக்கி உள்ளது.

இந்த புதிய வரம்பில் ரூபி, மரகதம் மற்றும் சைபயர் போன்ற வண்ண ரத்தின கற்கள் இந்த பிளாட்டினம் நகைகளில் அமைக்கப்பட்டுள்ளன. தூய பிளாட்டினத்தில் இருந்து வடிவமைக்கப்பட்ட இந்த சேகரிப்பு, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அணிந்து, பல்வேறு ஆடைகளுடன் இணைக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  

பலதரப்பட்ட வரம்பில், வசீகரிக்கும் நெக்லஸ்கள் மற்றும் வண்ண கற்களில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட கவர்ச்சியான நகைகள் வரையிலான டிசைன்களின் வரிசையாகும். நுட்பமான மற்றும் தடையற்ற வடிவங்கள், கவர்ச்சிகரமான வைர நுணுக்கங்களுடன் இணைந்து இந்த நகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எவாரா நகைகளின் சேகரிப்பு பற்றி ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், "கிரேஸ் பை பிளாட்டினம் எவாரா" ஒரு புதிய பிளாட்டினம் நகை சேகரிப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பிஜிஐ இந்தியாவுடன் ஆன எங்கள் கூட்டான்மையை வலுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் மற்றும் பெண்களுக்கு சமகால பிளாட்டினம் நகைகளை அறிமுகப்படுத்துகிறோம்” என்றார்.

இந்த புதிய சேகரிப்பு நகை வெளியீட்டு விழாவில் பேசிய, பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் வைஷாலி பானர்ஜி கூறுகையில், "கிரேஸ் பை பிளாட்டினம் எவரா”, அதன் பெயருக்கு உறுதியாக நிற்கும் ஒரு தொகுப்பாகும். பண்டிகை காலத்தில் இந்த துண்டுகள் உடனான நகை வடிவமைப்புகள் காண்போரிடம் பெரும் வரவேற்பு பெறும் என்று நாங்கள் நம்புகிறோம் ஜோய் ஆலுக்காஸ் உடனான எங்கள் கூட்டான்மையை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம் என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form