இந்தியாவின் முன்னணி உடல்நல தயாரிப்புகளின் பிராண்டான ஹிமாலயா வெல்னஸ் நிறுவனம், புதிய சுவைகளை எதிர்பார்க்கும் குழந்தைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக - ஆரஞ்சு, கூல் மின்ட் மற்றும் பபுள் கம் ஆகிய மூன்று அட்டகாசமான புதிய சுவைகளுடன் ‘ஹிமாலயா கிட்ஸ் டூத்பேஸ்ட்டை’ அறிமுகப்படுத்தி குழந்தைகளுக்கான டூத்பேஸ்ட் மார்க்கெட்டிலும் அதன் தடத்தினைப் பதித்துள்ளது.
வேம்பு, மாதுளை மற்றும் சைலிட்டால் உட்பட இந்த டூத்பேஸ்ட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள இயற்கையான உட்பொருட்கள் - பற்கள் மற்றும் ஈறுகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கும் அதேவேளையில், பற்களில் எந்தவிதமான பற்குழிகள், ப்ளாக் (கரை), கிருமிகள் மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பாதுகாக்க உதவுகின்றன. 80 கிராம் பேக்கில் கிடைக்கும் ஹிமாலயா கிட்ஸ் டூத் பேஸ்ட்டினை - பொது வணிக கடைகள், நவீன ஷாப்பிங் மையங்கள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் ஹிமாலயாவின் வலைத்தளம் உட்பட அனைத்து இடங்களிலும் வாங்கலாம்.
ஹிமாலயாவின் புதிய கிட்ஸ் டூத்பேஸ்ட்டில் வேம்பு, மாதுளை மற்றும் சைலிட்டால் போன்ற இயற்கை உட்பொருட்கள் உள்ளன. அவை பற்குழிகள், ப்ளாக் மற்றும் வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. வேம்பு ஒட்டுமொத்த வாய் பகுதியின் நலனையும் பராமரிக்க உதவுகிறது. மாதுளை ப்ளாக் என்னும் பற்கறையை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இதில் உள்ள சைலிட்டால் என்பது இயற்கையாக உருவாகும் ஒரு சர்க்கரை ஆல்கஹால் ஆகும். இது பொதுவாக டூத்பேஸ்ட் மற்றும் சூயிங் கம் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளில் சர்க்கரைக்கு நல்லதொரு மாற்றுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த டூத்பேஸ்ட்டில் திரிபலா, ஏலக்காய் மற்றும் அர்ஜுனா போன்ற மூலிகைகளும் உள்ளன - அவை வாய் நலனைப் பேணுவதற்கு பெயர் பெற்றவையாகும். இந்த டூத்பேஸ்ட் புத்துணர்ச்சியூட்டும் சுவைகளுடன் இனிமையான பல் துலக்கும் அனுபவத்தையும் வழங்கும்.
இந்த புதிய தயாரிப்பின் அறிமுகம் குறித்து பேசிய ஹிமாலயா வெல்னெஸ் நிறுவனத்தின் குழந்தை பராமரிப்பு பிரிவின், இயக்குனர் என்.வி.சக்ரவர்த்தி கூறுகையில், “குழந்தைகளுக்கான எங்களது இந்த புதிய டூத்பேஸ்ட் ரகங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், குழந்தைகளின் வாய் பகுதியை நன்கு பராமரிப்பதில் எங்களுக்கு இருக்கும் உறுதிப்பாட்டை மேலும் விரிவுபடுத்துகிறோம். தங்கள் குழந்தைகளின் வாய் நலத் தேவைகளுக்காக மென்மையான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான ஒரு தீர்வினை வழங்கவேண்டும் என விரும்பும் பெற்றோரை மனதில் கொண்டு எங்களது ஹிமாலயா கிட்ஸ் டூத்பேஸ்ட் ரகங்கள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
ஹிமாலயா வெல்னெஸ் நிறுவனத்தின் ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் நிபுணரான, டாக்டர். பிரதீபா பாப்ஷெட் கூறுகையில், " 99 சதவிகித இயற்கையான மூலப்பொருட்களால் இந்த டூத்பேஸ்ட் தயாரிக்கப்படுவதால், மென்மையான எனாமலைக் கொண்ட குழந்தைகளின் பற்களை அக்கறையுடன் திறம்பட சுத்தம் செய்கிறது. 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.