பழமையான தமிழ் மருத்துவ மூலிகை நுட்பங்களை ஆய்ந்து கண்டறியும் மூலிகை வேளாண் விஞ்ஞானி மற்றும் 20 ஆண்டு காலம் மூலிகை தொழிநுட்பத்தில் அனுபவம் பெற்ற டாக்டர் சாலை மருதமலை முருகனுக்கு (பிஎஸ்சி அக்ரி, எம்எஸ்சி, பிஎச்டி (ஹெர்பல் சயின்ஸ்)) சிறந்த மூலிகை ஆராய்ச்சியாளர் மற்றும் ஆலோசகர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.
இவர் திருச்சியில் சித்தர் வனம் சித்தா ஹாஸ்பிடல், சித்த முத்திரை உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சித்த முத்திரை ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் சித்தா ஃபாரஸ்ட் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இந்திய அரசு (எம்எஸ்எம்இ), ஐக்கிய நாடு சபைகள் மூலிகை பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு திட்டங்களில் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
டாக்டர் மருதமலை முருகன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகை சேகரிப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 100க்கும் மேற்பட்ட நிறுவங்களுக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்த்துள்ளார். தொழில் முனைவர், ஆராய்ச்சியாளர், ஆலோசகர், பயிற்றுநர், சுற்றுச்சூழலியல் ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். மேலும் இவர் இயற்கை வேளாண்மை மற்றும் மூலிகைகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார்.