இந்தியாவின் முன்னணி சுயாதீன உடல்நல காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ், கடந்த 15 மாதங்களில், அதாவது ஏப்ரல் 22 முதல் ஜூன் 2023 வரை, மதுரையில் ரூ.62 கோடிக்கும் அதிகமான உரிமைகோரல் தீர்வுகளை செலுத்தியுள்ளது. இந்த நிறுவனம் உரிமைகோரல் தீர்வுகளில், இந்த பிராந்தியத்தில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளுக்கு ரூ.58 கோடிக்கும் அதிகமாகவும், நெட்வொர்க் அல்லாத மருத்துவமனைகளுக்கு சுமார் ரூ.4 கோடியும் செலுத்தியது.
ஏப்ரல் 2022 மற்றும் ஜூன் 2023 க்கு இடையில், ஸ்டார் ஹெல்த், மதுரையில் ரூ.54 கோடிக்கு மேல் ரொக்கமில்லா உரிமை கோரல் தீர்வு மற்றும் ரூ.8 கோடி ஈடு செய்யும் உரிமை கோரல் தீர்வுகளை செலுத்தியது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அனைத்து ரொக்கமில்லா உரிமைகோரல்களையும் 2 மணி நேரத்திற்குள் தீர்த்தது. வாடிக்கையாளர்கள், திரும்பப்பெறும் வழியிலும் கூட தீர்வை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், உரிமைகோரல் சமர்ப்பித்த 7 நாட்களுக்குள் ஈடு செய்யும் கோரல்களை செலுத்த இந்த நிறுவனம் முயற்சித்துள்ளது.
ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் இன் சீஃப் க்ளைம்ஸ் ஆஃபீஸர் சனத் குமார் கே தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொண்டு கூறுகையில், "மதுரையில் உரிமைகோரல்களை தீர்த்து ரொக்கமில்லா சிகிச்சைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஸ்டார் ஹெல்த் விரைவாக இருந்துள்ளது என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பிராந்தியத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து சுகாதார பாதுகாப்பு தேவைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட எங்களின் புதுமையான தயாரிப்புகள் மூலமாகவோ அல்லது எங்கள் உரிமைகோரல் மேலாண்மை மூலமாகவோ இருந்தாலும் அவர்களுக்கு சாத்தியமாகும் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்"என்று கூறினார்.