ஸ்கோடாவின் புத்தம் புதிய ஸ்லேவியா மேட் எடிஷன் அறிமுகம்



பண்டிகைக் காலத்துக்காக விரிவாகவும், கவர்ச்சிகரமான விலையிலும், புத்தம் புதிய அம்சங்களுடனும், புத்தம் புதிய ஸ்லேவியா எடிஷனை அறிமுகப்படுத்துகிறது. குஷாக் மற்றும் ஸ்லேவியா மகிழுந்துகளுக்கு பண்டிகைக்கான குறைந்த காலச் சலுகையாக கவர்ச்சிகரமான அடிப்படை விலையாக ரூ 10.89 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குஷாக் மற்றும் ஸ்லேவியா ஸ்டைல் வேரியண்ட்களில் ஓட்டுனர் மற்றும் இணை-ஓட்டுனருக்கான மின் இருக்கைகள்  மற்றும் ஒளிரும் ஃபுட்வெல் உள்ளிட்ட புதிய அம்சங்கள் உள்ளன. டேஷ்-இன் மையப் பகுதியில் 25.4 செமீ ஸ்கோடா ப்ளே செயலிகளுடன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ரயைட் ஆட்டோ கம்பியின்றி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. குஷாக், ஸ்லேவியா ஆகியவற்றில் பூட்-இல் சப்-ஊஃபர் மற்றும்  குஷாக் மாண்டே கார்லோவில் மின் இருக்கைகளும், ஒளிரும் ஃபுட்வெல்லும் பொருத்தப்பட்டுள்ளன.

இப்புதிய அம்சங்கள் அனைத்துப் புத்தம் புதிய ஸ்லேவியா மேட் எடிஷனில் பொருத்தப்பட்டுள்ளன.  லிமிடெட்-எடிஷன் செடான் மேட் ஃபினிஷில் கார்பன் ஸ்டீல் பெயிண்டால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  ஸ்ஸ்லேவியா மேட் எடிஷன் வாங்கும் வாடிக்கையாளர்கள் 1.0 மற்றும் 1.5 டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் ஆகியவற்றில் விரும்பியதைத் தேர்தெடுக்கலாம். 6 ஸ்பீட் மேனுவல், 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் மற்றும் 7 ஸ்பீட் டிஎஸ்ஜி ஆகியவற்றில் விருப்பமான மகிழுந்துகளையும் தேர்வு செய்யலாம்.

பொருள் விரிவாக்கம் குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் சோல்க் கூறுகையில் ’எங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பான குடும்ப மகிழுந்துகளை வழங்குவதுடன், பொருள்கள் மற்றும் சேவைகளை மூலம் உயர்நிலைத் திருப்தியை வழங்குவது எங்கள் முனைவாகும். எங்கள் பொருள்களின் பண்டிகைக்காலச் சலுகைகள் மற்றும் மேம்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மதிப்பை இன்னும் மெருகூட்டுகின்றன’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form