முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற அக்டோபர் 15ம் தேதி, அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
"இராமநாதபுரம் கலாம் ஹாஃப் மாரத்தான்" என்ற பெயரில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு மொத்தம் ரூ. 2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியை இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் எய்ட் ஓ எய்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஹர்ஷ் கர்க் ஆகியோர் திட்டமிட்டு, செயல்படுத்த உள்ளனர்.
இந்தப் போட்டியில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் மாற்றத்திறனாளிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் மாரத்தான் போட்டியில் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதால் போட்டியில் பங்கேற்க விரும்பும் நபர்கள் முன்பதிவு செய்வது அவசியம் ஆகும்.
21 கி.மீ. போட்டிக்கு முன்பதிவு கட்டணம் ரூ.500, 5 கி.மீ. போட்டிக்கு முன்பதிவு கட்டணம் ரூ.350 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03509 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். rkhm2023.com என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.