“லவ் ஆல்” படத்தின் இசை விநியோக உரிமைகளை வென்ற விங்க் ஸ்டுடியோஇந்தியாவின் மாபெரும் இசை விநியோக சூழலமைப்பான விங்க் ஸ்டுடியோ, பேட்மிண்டன் சூப்பர் ஸ்டார் பி.கோபிசந்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட,  கேய் கேய் மேனன் நடிக்கும் ”லவ் ஆல்” என்ற படத்தின் விநியோக உரிமையை வென்றுள்ளது.

 “லவ் ஆல்” என்ற படத்தை மகேஷ் பட் மற்றும் பி கோபிசந்த் ஆகியோர் ஆனந்த் பண்டிட்டுடன் இணைத்து தயாரித்துள்ளனர். இது செப்டம்பர் 1 ஆம் தேதி எம் ரமேஷின் லக்ஷ்மி கனபதி பிலிம் ஸ்டுடியோஸால் வெளியிடப்படுகிறது. இதை சுதான்ஷு ஷர்மா இயக்கியுள்ளார். இதில் ஸ்வஸ்திகா முகர்ஜி, ராபின் தாஸ், ஷ்ரிஷ்வரா, அதுல் ஸ்ரீவத்சவா மற்றும் ராஜா பண்டேலா ஆகியோரும் நடித்துள்ளனர்.

விநியோக ஏற்பாட்டைப் பற்றிப் பேசும்போது,  ஏர்டெல் டிஜிட்டலின் தலைமைச் செயல் அதிகாரியும், ஏர்டெல்லின் தலைமை புராடக்ட் அதிகாரியுமான ஆதர்ஷ் நாயர், “  சுதந்திரமாகச் செயல்படும் கலைஞர்களோடு இணைந்து  நாங்கள் மாபெரும் வெற்றிபெற்றோம். எங்கள் பட்டியலில் தற்போது 1000 கலைஞர்கள் உள்ளனர்.  டிஜிட்டல் விநியோகத்தைக் கண்டறியும் நோக்கோடு சென்றடைவதிலும் இணைப்பிலும் ஏர்டெல்லின் உள்ளார்ந்த வலிமைகளை முதலாக்க விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு இந்த விநியோக பார்ட்னர்ஷிப் எதிர்காலத்தில் பெரும் வாய்ப்புகளைத் திறக்கும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form