பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் உதவும் எச்சிஎல் டெக்



முன்னணி குளோபல் டெக்னாலஜி நிறுவனமான எச்சிஎல் டெக்,  இந்தியாவில்  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு சைபர் செக்யூரிட்டி விழிப்புணர்வு  பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன், எச்சிஎல் டெக் திட்டத்தில் முதல் முதலாக பயிற்சியை நிறைவு செய்த சுமார் 100 பேர் அடங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் குழுவை பாராட்டி வாழ்த்தினார்.

எச்சிஎல் டெக் கேரீர்ஷேப்பர்- இன் மேம்பட்ட எட்டெக் தளத்தில் இந்த சைபர்செக்யூரிட்டி விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது மற்றும் மாணவர்கள் மத்தியில் சைபர் செக்யூரிட்டி மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்த, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு உதவுகிறது. அடிப்படை சைபர்செக்யூரிட்டி கருத்தாக்கங்கள், அச்சுறுத்தலுக்கான மின் வெளிகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் தொடர்பான நேரடி அமர்வுகள், ஆன்லைன் அசைன்மெண்ட்ஸ் மற்றும் செய்முறை பயிற்சிகள் இந்த எட்டு மணிநேர கல்வித் திட்டத்தில், உள்ளடங்கும். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் சைபர் செக்யூரிட்டி குறித்த கல்வியறிவை இந்தியாவின் எந்த இடத்திலிருந்தும் தொழில்துறை வல்லுனர்களிடமிருந்து பெறலாம்.

"பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான இந்த சைபர் செக்யூரிட்டி விழிப்புணர்வு சான்றிதழ் திட்டமானது, அடிமட்டத்தில் இருந்து ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழமைப்பை பேணிப் பாதுகாத்து வளர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேம்பட்ட சைபர்செக்யூரிட்டி கல்வியறிவை வழங்கி ஆசிரியர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், எதிர்காலத்தில் அடுத்த  தலைமுறையினர் டிஜிட்டல் யுக  சவால்களை எதிர்கொண்டு அதை வெற்றிகரமாக கடந்து செல்ல  தயார் நிலையிலிருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்,” என்று எச்சிஎல் டெக் எட்டெக் சர்வீசஸ், கார்போரேட் வைஸ் பிரசிடண்ட் மற்றும் பிஸினஸ் ஹெட் ஸ்ரீமதி சிவசங்கர் கூறினார்.

“எச்சிஎல் டெக்-ன் சைபர் செக்யூரிட்டி திட்டத்தில் கலந்து கொண்டு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு ஆசிரியர்களை அங்கீகரித்து பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தகவல் தமிழ்நாடு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை சேவைகள் அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form