மதுரையின் முன்னணி கல்வி கல்வி நிறுவனமும் குளோபல் ஸ்கூல் அறக்கட்டளையின் ஒரு அங்கத்தினருமான விகாசா வேர்ல்ட் ஸ்கூல் தனது முதல் ஆண்டு விழா குவிஸ் நிகழ்ச்சியான விஸ்குவிஸ் -சிறந்த அறிவு யுத்தம் என்ற தலைப்பில் சமீபத்தில் நடத்தியது. ஜூனியர் சீனியர் என இருபிரிவுகளில் மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள 30க்கும் மேலான பள்ளிகளில் இருந்து 750க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இந்த குவிஸ் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
7 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும் அதேநேரத்தில் 10 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சீனியர் பிரிவிலும் பங்கேற்றனர். அறிவியல், வரலாறு, புவியியல், இலக்கியம் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் உட்பட பரந்த வகையிலான பாடங்கள் முழுவதும் மாணவர்களின் அறிவை சோதிக்கும் வகையில் கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. குவிஸ் மாஸ்டரான பெர்டி ஆஷ்லே பங்கேற்பாளர்களை மேடைக்கு வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
குவிஸ் சுற்றுகள் வகைகளின் ஜூனியர் முதல் சுற்று மற்றும் சீனியர் பிரிலிம்ஸின் இரண்டாவது சுற்று என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டன. பல சுற்று கடுமையான குவிஸ்க்கு பிறகு, இறுதி அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஜூனியர் பிரிவில் திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் அணி வெற்றி பெற்றது, சீனியர் பிரிவில் வல்லப வித்யாலயா அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் தகுதிசான்றிதழ்களை முதன்மை விருந்தினர்கள் டாக்டர் எம்.சரவணன் எம்பிபிஎஸ் மற்றும் மதுரை ஆர்ஐஓ குழந்தைகள் மருத்துவமனையின் கவிதா சரவணன் எம்சிஏ ஆகியோர் வழங்கினார்கள். இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்ற அணிகள் மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விகாசா ஸ்கூல்களின் மூத்த முதல்வர் ஏ.சுதாகரன் பேசுகையில், “விஸ்குவிஸ் போட்டியின் முதல் பதிப்பை மாபெரும் வெற்றியடையச் செய்த அனைத்து தலைமை விருந்தினர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்ள்கிறேன். விஸ்குவிஸ் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ந்து இளம் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் தளமாக மாறும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.