இந்தியா உலகளாவிய மின்னணுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்து வருகிறது. பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் செப்டம்பர் 13 முதல் 15, 2023 வரை திட்டமிடப்பட்டுள்ள பதிப்புகளில், உலகம் முழுவதிலுமிருந்து சப்ளையர்களை வரவழைத்து, எலக்ட்ரானிகா இந்தியா மற்றும் புரொடக்ட்ரோனிகா இந்தியா ஆகியவை மின்னணு வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
2023 வர்த்தக கண்காட்சிகளின் பதிப்புகள் 35,000 சதுரமீட்டர் பரப்பளவில் இருக்கும், சுமார் 585 நிறுவனங்கள் 5,000+ தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள்மற்றும்புதுமைகளைக் காட்சிப்படுத்தி சந்தையில் வலுவான இடத்தைப் பதிவுசெய்யும். இந்த ஆண்டு நிகழ்வுகளின் முக்கிய சிறப்பம்சம் 'இவிஎஸ் லைவ்! - எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தீர்வுகள்”. இந்த புதிய முயற்சி, ஆட்டோமொபைல்கள் மற்றும் மின்சார வாகனங்களில் எப்போதும் அதிகரித்து வரும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளடக்கத்துடன் மின்சார வாகனங்களுக்கான முக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
மெஸ்ஸெமுன்சென் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரெய்ன்ஹார்ட் ஃபைஃபர் கூறுகையில், “எலக்ட்ரானிகா இந்தியா மற்றும் புரொடக்ட்ரோனிகா இந்தியா நாட்டின் அதிகரித்து வரும் உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள உலகளாவிய தொழில்நுட்ப சப்ளையர்களை ஒன்றிணைக்கின்றன. உள்நாட்டு உற்பத்தி மேலும் மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளாக விரிவடைவதால் இந்த பதிப்பு மிகவும் சிறப்பானதாக இருக்கும்” என்றார்.