பிரிட்டானியா மில்க் பிக்கீஸின் #க்ரோத்நீட்ஸ்போத் பிரச்சாரம்

 




ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வெற்றியை ஊக்குவிப்பதில் பெற்றோர் இருவரின் சமமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பு எந்தளவிற்கு ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது என்பதை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாட்டிற்கான அதன் சமீபத்திய விளம்பரப் பிரச்சாரத்தை உருவாக்கியுள்ளது. லோவ் லின்டாஸ் பெங்களூரு நிறுவனம் இந்த பிரச்சாரத்தினை கருத்தாக்கம் செய்துளள்ளது. 

‘குழந்தைகளின் வளர்ச்சிக்கு அம்மா, அப்பா ஆகிய இருவரும் அவசியம்’ என்பதை வலியுறுத்தும் இந்த விளம்பரத்தில் - ப்ரீத்தி அஷ்வின், அவரது கணவரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுமான ஆர்.அஷ்வின் மற்றும் அவர்களது மகள்கள் இருவரும் நடித்துள்ளனர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த விளம்பரப் பிரச்சாரம், குழந்தை வளர்ப்பில் பொதுவாக இருக்கும் மனப்பாங்கை மாற்ற வேண்டியது குறித்தும், தாய்-தந்தை இருவரும் ஒருங்கிணைந்து குழந்தை வளர்ப்பில் பங்காற்றுவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்துகிறது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அலுவலர், அமித் தோஷி இதுகுறித்து பேசுகையில், “குழந்தைகளின் வாழ்க்கைக்காக தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் சமமான பங்களிப்பினை வழங்கி, குழந்தை வளர்ப்பில் உண்மையான பார்ட்னர்களாக இருக்கும் பெற்றோரை கொண்டாடும் விதமாகவும் இந்த பிரச்சாரத்தை உருவாக்கினோம். ‘குழந்தையின் வளர்ச்சிக்கு இருவரும் தேவை’ என்ற கருத்தை கூறும் இந்த விளம்பரத்தில் ப்ரீத்தி மற்றும் அஷ்வின் தம்பதியர் பங்கேற்றதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். குழந்தை வளர்ப்பு பொறுப்புகளை ஒருசாரர் மட்டுமே ஏற்கவேண்டும் என்கிற பழைய சிந்தனையைப் பின்பற்றும் குடும்பங்களின் மாற்றத்திற்கு இந்த முன்முயற்சி ஒரு உத்வேகத்தைத் தருமென நம்புகிறோம்” என்று கூறினார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த விளம்பரம் குறித்தும், அவர்கள் கூறும் கருத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசிய,  ப்ரீத்தி மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின், தம்பதியர், “குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெற்றோர் இருவரும் அவசியம் என்பதை வலியுறுத்தும் மில்க் பிக்கீஸின் இந்த ‘குரோத் நீட்ஸ் போத்’ அணுகுமுறையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். மேலும், எங்களது குழந்தைகளின் வளர்ச்சிக்கு நாங்கள் இருவரும் சமமான பங்களிப்பினை வழங்கும் தகவலை அனைவருக்கும் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறோம்” என்று கூறினர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form