5 வண்ணங்களில் அறிமுகமாகும் ராயல் என்பீல்டு புல்லட் 350

நடுத்தர அளவிலான (250சிசி--750சிசி) மோட்டார் சைக்கிள் பிரிவில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ராயல் என்பீல்டு நிறுவனம்  தனது புதிய அவதாரத்தில் அதன் பழம்பெரும் பாரம்பரியத்துடன் 2023 புல்லட் 350 ஐ அறிமுகப்படுத்தியது. மறுவரையறை செய்யப்பட்ட ஜே-மாடல் என்ஜினுடன் இந்த மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.  2023 புல்லட் 350 ஆனது, உலகளவில் பாராட்டப்பட்ட 349சிசி ஏர்-ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது மீயடர், கிளாசிக் மற்றும் ஹண்டர் மாடல்களில் உள்ளது.  எரிபொருள் உட்செலுத்தப்பட்ட, இது 6100 ஆர்பிஎம்மில் 20.2 பிஎச்பியையும், 4000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதன் சேஸிஸ் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 முந்தைய புல்லட் மாடல்களுடன் ஒப்பிடுகையில், பெரிய விட்டம் கொண்ட 41 மிமீ முன் போர்க்குகள் மற்றும் முன்புறத்தில் 100/90-19 மற்றும் பின்புறத்தில் 120/80-18 அளவுள்ள அகலமான டயர்களைக் கொண்டுள்ளது. முன்புறம் 300மிமீ டிஸ்க் பிரேக், பின்புறம் 270 மிமீ டிஸ்க் அல்லது டிரம் பிரேக்கைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப ஒற்றை இருக்கையைக் கொண்டுள்ளது. மேலும் இது மேம்படுத்தப்பட்ட  மட்கார்டுகளுடன், மிகவும் ஸ்டைலாகவும் கம்பீர தோற்றத்தைக் கொண்டுள்ளது.

2023 புல்லட் 350 மூன்று பதிப்புகளில் வெளியிடப்பட்டது, இவை அனைத்தும் பிரீமியம் வண்ணங்களுடன், சிறப்பான கைவண்ணத்தில் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. புல்லட் மிலிட்டரி ரெட் மற்றும் மிலிட்டரி பிளாக் ஆகியவை சிங்கிள் சேனல் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் டிரம் பிரேக் மற்றும் ஒற்றை வண்ணம் தீட்டப்பட்ட பெட்ரோல் டேங்க் மற்றும் கிளாசி டீக்கால் ஆகியவற்றுடன் வெளிவந்துள்ளது. இதேபோல் பிளாக் அல்லது மெரூன் வண்ணத்தில் உள்ள புல்லட் ஸ்டாண்டர்டு இரட்டை சேனல் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பின்புற டிஸ்க்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் நேர்த்தியான முறையில் கையால் வடிவமைக்கப்பட்ட டிசைனுடன் கூடிய பல வண்ண நிறம் கொண்ட டேங்க் மற்றும் குரோம் மற்றும் கோல்ட் பேட்ஜ்ளைக் கொண்டுள்ளது. புல்லட் பிளாக் கோல்ட் ஆனது மேட் மற்றும் க்ளோஸ் பிளாக் டேங்க், காப்பர் மற்றும் கோல்ட் 3டி பேட்ஜ், காப்பர் பின்ஸ்ட்ரிப்பிங் மற்றும் ஆன்-ட்ரெண்ட், பிளாக்-அவுட் என்ஜின் மற்றும் உதிரிபாகங்கள் ஆகியவற்றின் அற்புதமான கலவையாக வெளிவந்திருக்கிறது. மேலும் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ரியர் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டுள்ளது.

மூன்று பதிப்புகளும் தனித்துவமான 13-லிட்டர், டியர் டிராப் டேங்க், பாரம்பரிய ராயல் என்பீல்டு கேஸ்கட், புதிய ஹெட்லேம்ப், ‘டைகர் ஐஸ்’ - முன்புற விளக்குகள், டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்சிடி இன்பர்மேஷன் பேனல் மற்றும் ஹேண்டில்பாருக்கு கீழே பொருத்தப்பட்ட யூஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உலக அளவில் மிகுந்த வரவேற்பைக் கொண்டுள்ள இந்த புல்லட்டிற்கான முன் பதிவு இந்தியாவில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் துவங்கியுள்ளது. செப்டம்பர் 3 முதல் விற்பனை மற்றும் சோதனை ஓட்டம் துவங்குகிறது. இதன் மிலிட்ரி பிளாக் மற்றும் ரெட் புல்லட்களின்  எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,73,562/-  மற்றும்  ஸ்டாண்டர்ட் விலை ரூ.1,97,436/- மற்றும் பிளாக் கோல்டு விலை ரூ. 2,15,801/- க்கு கிடைக்கிறது என ராயல் என்பீல்டு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form