மஹிந்திரா அறிமுகப்படுத்தும் ஒஜா டிராக்கடர்கள்

மஹிந்திரா குழுமத்தின் ஒரு பிரிவும், உலகின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளருமான மஹிந்திரா டிராக்டர்ஸ், தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற ஃபியூச்சர்ஸ்கேப் என்ற நிகழ்வில்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, எதிர்காலத்  தயாராக இருக்கும் தனது டிராக்டர்களின் வகையான மஹிந்திரா ஓஜா-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. 

ஓஜா 2127 ரூ. 5,64,500 விலையிலும் (புனே) ஓஜா 3140   ரூ.7,35,000 விலையிலும் வெளியிடப்பட்டன. ஓஜா  வரம்பின் அறிமுகத்துடன், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த மஹிந்திரா அதன் 1100 சேனல் கூட்டாளர்களின் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும். மஹிந்திரா ஓஜா டிராக்டர் வரம்பு இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட டிராக்டர் உற்பத்தி ஆலைகளில் ஒன்றான தெலுங்கானாவில் உள்ள ஜஹீராபாத்தில் உள்ள மஹிந்திராவின் அதிநவீன டிராக்டர் வசதியில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும்.

 மஹிந்திரா ரிசர்ச் வேலி இன் பொறியியல் குழுக்கள்   மற்றும் மற்றும் ஜப்பானின் மிட்சுபிஷி மஹிந்திரா அக்ரிகல்ச்சர் மெஷினரி ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில்  1200 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்ட புதிய ஓஜா வரம்பு, லைட் வெயிட் 4டபிள்யுடி டிராக்டர்  வடிவமைப்பு மற்றும் பொறியியலில் ஒரு உருமாறும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.  கேப் டவுனில், மஹிந்திரா, பல்வேறு சந்தை தேவைகளை நிவர்த்தி செய்ய, சப் காம்பாக்ட், காம்பாக்ட் மற்றும் ஸ்மால் யூட்டிலிட்டி பிளாட்பார்ம்ஸ் ஆகிய 3 ஓஜா இயங்குதளங்களில் புதிய டிராக்டர்களை வெளியிட்டது. 

தரநிலையாக 4டபிள்யுடி உடன், மஹிந்திரா, இந்திய சந்தைக்கு 7 புதிய டிராக்டர் மாடல்களை காம்பாக்ட் மற்றும் ஸ்மால் யூட்டிலிட்டி பிளாட்பார்ம்களில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல்கள்  20எச்பி முதல் 40எச்பி (14.91 கிலோ வாட் முதல் 29.82கிலோ வாட்) வரை, ஒரு பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு, இணையற்ற இயங்குதளப் பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு விவசாயப் பணிகளைக் கையாளும் திறனுக்காக உள்ளன.

புதிய ஓஜா  டிராக்டர் வரம்பை அறிமுகப்படுத்துதலில் மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் பண்ணை உபகரணத் துறையின் தலைவர் ஹேமந்த் சிக்கா பேசுகையில், "இந்தியாவில் 7 சுறுசுறுப்பான இலகுரக 4டபிள்யுடி டிராக்டர்கள் மற்றும் இலகுரக 4டபிள்யுடி ஓஜா டிராக்டர்களை முன்னோடி தொழில்நுட்பங்களுடன் வெளியிடுவது, உலகளவில் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை உண்மையிலேயே உருவாக்கப்படுத்துகிறது"என்று கூறினார்.

ஓஜா இந்தியாவிற்கான வெளியீட்டுத் திட்டங்களைப் பற்றி பேசிய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் ஃபார்ம் டிவிசன் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் வாக்  ”ஓஜா டிராக்டர் வரம்பு, இந்திய விவசாயத்தில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறது. 4டபிள்யுடி திறன்களை தரநிலையாகக் கொண்டு, முன்னோடி ஆட்டோமேஷன் கட்டுப்பாடுகள், வரம்பு முழுவதும்   துல்லியம் மற்றும் செயல்திறனைப் பெருக்குகின்றன. ப்ரோஜா, மைஓஜா மற்றும் ரோபோஜா ஆகிய மூன்று மேம்பட்ட தொழில்நுட்பப் தொகுப்புக்களைக்   கொண்டுள்ள ஓஜா-வை இந்தியாவின் உலகளாவிய கண்டுபிடிப்பாக நாங்கள் பெருமையுடன் முன்வைக்கிறோம்"என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form