ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான இந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்டான காளீஸ்வரி நிறுவனம் ஜூலை 30 அன்று மதுரையில் பாரம்பரிய மற்றும் சுவையான உணவு வகைகளை சமைக்கும் ‘சமையல் திருவிழா’ போட்டியை நடத்தியது.இந்த போட்டியில் சுவை மற்றும் நாம் அன்றாட சமைக்கு பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை சமைத்தனர். கார்டியா அட்வான்ஸ்டு ஆயில் ரேஞ்ச் மூலம் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் 500க்கும் அதிகமான உணவுகளை சமைத்தனர்.
வெற்றியாளருக்கு 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிரபல செஃப் தீனா நீதிபதியாக கலந்துகொண்டார். ரங்கிலா ப்ரீத்தி முதல் பரிசை வென்றார். ராஜலட்சுமி மற்றும் சுஜாதா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசை பெற்றனர்.
வெற்றியாளர்களை அறிவித்த செஃப் தீனா, “சுவையான, ஆரோக்கியமான மற்றும் சத்தான பாரம்பரிய உணவுகளை சமைத்து வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பல ஆண்டுகளாக, நமது உணவு முறை பெருமளவில் மாறிவிட்டன, நமது முந்தைய தலைமுறையினர் சமைத்த அன்றாட சுவையான உணவுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும், அவற்றின் அற்புதமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக - அவற்றின் மதிப்பை உணர்ந்து அவற்றை நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்” என்றார்.
காளீஸ்வரி ரிஃபைனரி பிரைவேட் லிமிடெட்-ன் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் டைரன் டால், ” நுகர்வோருக்கு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைத் தரும் சிறந்த மதிப்புமிக்க, ஆரோக்கியமான, சத்தான மற்றும் சுவையான தயாரிப்புகளை வழங்குவதில் எங்களின் தொடர்ச்சியான கவனமானது எங்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கிறது. சிறந்த ஆற்றல், முயற்சி மற்றும் ருசித்து உண்ணும் வகையில் பாரம்பரிய உணவு வகைகளை வழங்கியதற்காக வெற்றியாளர்களையும், பங்கேற்பாளர்களையும் நான் வாழ்த்துகிறேன். இங்கு இருக்கும் பங்கேற்பாளர்கள் இந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்க்கவும், அதைத் தங்கள் சகாக்களுக்கும், அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தர வேண்டுமென நான் ஊக்குவிக்கிறேன்” என்றார்.