ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்உலகளாவிய ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி பிராண்டான ஓப்போ, இந்தியாவில் ஓப்போ ஏ78 ஐ அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த மொபைல் ஆனது அக்வா கிரீன் மற்றும் மிஸ்ட் பிளாக் என இரண்டு நிற ஃபினிஷ்களில் கிடைக்கும். அக்வா கிரீன் ஏ78 ஆனது, ஓப்போவின் முதல் டயமண்ட் மேட்ரிக்ஸ் வடிவமைப்பை வாட்டர்- கிரீன் பேஸ் லேயர் மேல் மிகைப்படுத்த டபுள் லேயர் செயல்முறையைப் பயன்படுத்துகிறது. மிஸ்ட் பிளாக் பதிப்பு ஆனது மொபைலுக்கு தனித்துவமான மெட்டாலிக் பளபளப்பை அளிக்கும் வகையில் மஞ்சள்-பச்சை நிறத்துடன் அதன் தூய கருப்பு பேஸூடன் வருகிறது.

இது 8ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் உடன் ரூ17,499க்கு ஆகஸ்ட் 1 முதல் மெயின்லைன் ரீடெயில் விற்பனை நிலையங்கள், ஓப்போ ஈ-ஸ்டோர்  மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை மூலம் விற்பனைக்கு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மெயின்லைன் ரீடெயில் விற்பனை நிலையங்களில் இருந்து 10 சதவிகிதம்  வரை கேஷ்பேக் பெறலாம் மற்றும் எஸ்பிஐ கார்டுகள், கோட்டக் மஹிந்திரா பேங்க் மற்றும் பரோடா பேங்க் மற்றும் ஒன் கார்டு போன்ற முன்னணி வங்கிகளில் 3 மாதங்கள் வரை நோ-காஸ்ட் இஎம்ஐ  பெறலாம். ஓப்போ வாடிக்கையாளர்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து 500 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் மற்றும் லாயல்டி போனஸைப் பெறலாம்.

புதுமையான 6.4-இன்ச் எஃப்எச்டி + டிஸ்ப்ளே ஆனது மென்மையான ஸ்க்ரோலிங்கிற்கான 90ஹர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட், கேம்களை விளையாடும்போது விரைவான தொடு பதிலுக்காக 180ஹர்ட்ஸ் வரையிலான தொடு மாதிரி வீதம், பல்வேறு ஒளி சூழல்களுக்கு ஏற்ப ஸ்மார்ட் அடாப்டிவ் பேக்லைட்டிங் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இது 50எம்பி மெயின் கேமரா மற்றும் 2எம்பி டெப்த் கேமராவைக் கொண்டுள்ளது. 8எம்பி முன் மற்றும் 50எம்பி பின்பக்கக் கேமராக்களில் இருந்து ஒரே நேரத்தில் பதிவுசெய்து, கிரியேட்டிவ் விலாக்களுக்கான காட்சிகளை ஒரே ஃபிரேமில் சேர்க்க உதவும் டூயல் வியூ வீடியோ செயல்பாட்டையும் மொபைல் ஆதரிக்கிறது. 

 ஓப்போ ஏ78 ஆனது ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஒசி, 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுகள் மூலம் 1டிபி கூடுதல் ஸ்டோர் செய்யும் தொகுப்புடன் வருகிறது. கூடுதலாக, ஓப்போவின் ரேம் விரிவாக்க தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்டோரேஜ் இல் இருந்து 8ஜிபி வரை ரேமை விரிவாக்கம் செய்ய முடியும் .  டைனமிக் கம்ப்யூட்டிங் என்ஜின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் புதிய ஸ்மார்ட்ஃபோனைப் போல வேகமாகவும், மென்மையாகவும் ஏ78-ஐ செயல்பட வைக்கிறது. ஒரே நேரத்தில் 19 ஆப்ஸ் வரை இயக்க முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் கலர் ஓஎஸ்13.1-ல் இயங்குகிறது-ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்டது. ஏஐ அடிப்படையிலான  ஸ்க்ரீன் மொழிபெயர்ப்பு போன்ற அம்சங்களுடன் தனியுரிமை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது. மெசேஜிங் ஆப்ஸின் ஸ்கிரீன்ஷாட்களில் பயனர் புகைப்படங்களை ஆட்டோ பிக்சலேட் செய்யலாம். இது 5000எம்ஏஎச் பேட்டரியுடன் 67வாட் சூப்பர்விஒஒசிடிஎம் ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.  45 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகும்.

 ஓப்போ ஆனது அடாப்டர் ஓவர்லோட் பாதுகாப்பு, ஃபிளாஷ்-சார்ஜ் நிலை அடையாள பாதுகாப்பு, சார்ஜிங் போர்ட் ஓவர்லோட் பாதுகாப்பு, பேட்டரி கரண்ட்/வோல்டேஜ் ஓவர்லோட் பாதுகாப்பு, மற்றும் பேட்டரி ஃபியூஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய உகந்த நாள் முழுவதுமான சார்ஜிங் பயன்முறை மற்றும் 5-லேயர் சார்ஜிங் பாதுகாப்பு போன்ற அம்சங்களுடன் பேட்டரி ஃபியூஸ் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது என ஓப்போ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

 

Post a Comment

Previous Post Next Post

Contact Form