அசோக் லேலண்ட்-ன் 'ட்ரீம் டிரைவ்' நாமக்கல்லை அடைந்தது!


 

அசோக் லேலண்ட் நிறுவனம் தனது 75 -வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மேற்கொண்டு வரும் 'கனவு பயணமான ‘ட்ரீம் ட்ரைவ்’ (Dream Drive)-ன் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்தின் 'படா தோஸ்த் '(BadaDost) வாகனம் நாமக்கல்லை வந்தடைந்தது. இந்த பயணம் பெங்களுருவில் தொடங்கி சேலம் நோக்கி செல்கிறது. எண்ணூரில் உள்ள அதன் வாகன உற்பத்தி ஆலையில் இந்த பயணம் நிறைவு பெறுகிறது. இந்த பயணத்தில் வேலூர், சென்னை ஆகிய நகரங்களையும் உள்ளடக்கி செல்கிறது.

நாடு முழுவதும் உள்ள 5 பல்வேறு வழித்தடங்களின் வாயிலாக சுற்றியுள்ள பகுதிகளையும் சென்றடையும் விதமாக மொத்தம் 10 வாகனங்கள் இந்த மாபெரும் ட்ரீம் ட்ரைவில் ['Dream Drive']ல் பங்கேற்கின்றன. .பெங்களூருவில் தொடங்கி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, திப்ருகர் என நாடு முழுவதும் உள்ள 5 முக்கியமான இடங்கள் வழியாக பயணித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகளில் இப்பயணம் நிறைவு பெறுகிறது. தேசத்துடனான நிறுவனத்தின் நீடித்த உறவை பல்வேறு விதமாக கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பயணத்தின் ஊடாக, டீலர்ஷிப் வலைப்பின்னல் உடனான பல்வேறு நிகழ்ச்சிகளையும், அதன் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுடன் நேரடி உறவாடலையும் மேற்கொள்வதுடன், வர்த்தக வாகன துறையில் கடந்த பல வருடங்களாக பெற்ற அனுபவத்திலிருந்து தேவையான கருத்துகளையும் சேகரிக்க உள்ளது.

ட்ரீம் ட்ரைவ் குறித்த உடனடித் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், நிறுவனத்தின் உரையாடலில் பங்கேற்கவும், அசோக் லேலண்டின் சமூக ஊடகங்களைப் பின் தொடரலாம். அல்லது நிறுவனத்தின் இணையதளமான www.ashokleyland.com <http://www.ashokleyland.com>  ஐ பார்வையிடலாம் என அசோக் லேலண்ட் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form