ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் பிரபல நிறுவனமும், நாட்டின் முன்னணி வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனமுமான அ்சோக் லேலண்ட் புதன்கிழமையன்று கன்னியாகுமரியில் தொடங்கி லே வரையிலான 'மன்சில் கா சஃபர்' என்ற பெயரில் கம்பீரமான பயணத்தைத் தொடங்கியது. கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படும் தினத்தன்று தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு நிறுவனத்தின் 75-வது ஆண்டு நிறைவு விழாவின் முக்கியமான தருணத்தை குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.
அசோக் லேலண்டின் அடையாள சின்னமான பிரம்மாண்டமான வர்த்தக வாகன ரகங்களையும், இந்திய ஆயுதப் படைகளுடனான அதன் கூட்டுச் செயல்பாட்டையும் கொண்டாடும் விதமாக, இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியிலிருந்து 'மன்சில் கா சஃபர்' பயணம் தொடங்கப்பட்டது. இந்தப் பயணம் அசோக் லேலண்ட் வாகனங்களின் அபாரமான உறுதித்தன்மை, அசத்தலான ஆற்றல், நீண்ட காலம் உழைக்கும் தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 4,000 கிமீ தொலைவை கடந்து செல்கிறது.
பல ஆண்டுகளாக, இந்திய ராணுவத்துக்குத் தேவையான போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதில் அசோக் லேலண்ட் முக்கிய பங்கு வகித்து வருகிறது.அசோக் லேலண்ட் நிறுவனமும் இந்திய ராணுவமும் மிகவும் ஆழமாக ஒன்றிணைந்து, இரு தரப்பிலும் வலுவான உறுதியுடன் கூடிய நீண்ட கால கூட்டுச் செயல்பாட்டை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்திய ராணுவத்தின் போக்குவரத்துக்கான வாகனத் தேவைகளை பூர்த்தி செய்வதில் அசோக் லேலண்ட் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பின் அடிப்படையில் இந்த கூட்டுச் செயல்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ்ந்த பயணத்தின் போது, ராணுவ வீரர்கள், வாகன ஆர்வலர்கள், பொதுமக்கள், பிற கூட்டு நிறுவனங்களுடன், வளர்ச்சி, புதுமை, வெற்றி ஆகியன குறித்தும், அசோக் லேலண்டுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையிலான வெற்றிகரமான கூட்டு செயல்பாடு குறித்துமான கதைகளை பகிர்ந்து கொள்கிறது.
இதில் காட்சிக்காக, காடுகள், பாலைவனங்கள், மலைகள் என மூன்றுவிதமான நிலபரப்புகளில் கம்பீரமாக பயணிக்கும் மூன்று பிரம்மாண்டமான டிரக்குகள் இடம்பெறுகின்றன. இவை இந்திய சாலை மார்க்கமாக பயணித்து- ராணுவம் மேற்கொண்ட வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் மூன்று நிலப்பரப்புகளை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளன. முதல் டிரக் பல ஆண்டுகளாக இந்திய ராணுவத்துடனான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நீண்ட கால உறவை எடுத்துக் காட்டுவதாகவும், இரண்டாவது டிரக், கார்கில் வீரர்களுக்கு வெற்றி அஞ்சலி செலுத்துவதோடு அவர்களது மாபெரும் வெற்றியை கொண்டாடுவதாகவும், மூன்றாவது டிரக் ராணுவத்தின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாகவும் அமைந்திருக்கும்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஷேனு அகர்வால் கூறுகையில், "எங்களின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், இந்திய ஆயுத படைகளுடான எங்களது நீண்ட கால உறவை கொண்டாடும் விதமாக இந்த பயணத்தை மேற்கொள்கிறோம். கன்னியாகுமரி தொடங்கி லே வரையிலான எங்களது கம்பீரமான இந்த பயணம் இந்திய ராணுவத்துடனான எங்களது பொறுப்புணர்வுடனான கூட்டு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம். மேலும் தடுப்பு வேலிகளைத் தகர்த்து, தடை கற்களைத் தாண்டி தொடர்ந்து நம்பகமான கூட்டு நிறுவனமாக தொடர்ந்து செயல்படுவதற்கு நாங்கள் விடாமல் முயற்சி செய்வோம்" என்றார்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகள் பிரிவின் எல்.சி.வி. வாகனப்பிரிவின் தலைவர் அமன்தீப் சிங் கூறுகையில், "கன்னியாகுமரியில் தொடங்கி லே வரையிலான இந்த பயணம் என்பது ஆற்றல், வலிமை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை குறிப்பிடும் வகையிலான பயணமாகும். 75 ஆண்டு கால சிறப்பையும், இந்திய ராணுவத்துடனான எங்களது நீண்ட கால கூட்டுச் செயல்பாட்டையும் சிறப்பிக்கும் வகையில் அசோக் லேலண்ட் 'மன்சில் கா சஃபர்' கம்பீர பயணத்தை தொடங்கும் அதே வேளையில், வளர்ச்சிக்கான உத்வேகத்தையும் தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வையும் உள்ளடக்கி நாங்கள் முன்னோக்கிச் செல்கிறோம். இந்திய ராணுவத்துக்கு சேவை செய்வதில் உள்ள எங்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு இந்த பயணம் ஒரு சான்றாக அமையும்" என்றார்.