கோவையில் மோட்டோ வால்ட் இந்தியாவின் புதிய பைக் ஷோரூம் துவக்கம்

 


தனது பல்வகைப் பிரிமியம் வாகனங்களுக்கான சலுகைகளை விரிவுபடுத்தும் வகையில், மகாவீர் குழுமத்தின் ஓர் அங்கமான ஆதீஷ்வர் ஆட்டோ ரைட் இந்தியா நிறுவனம், தனது புத்தம் புது மல்டி-பிராண்ட் சூப்பர் பைக் தனியுமைக் கிளையைத், கோவையில் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.‘அண்ணாமலைஸ் ஏஜென்சீஸ்’ என்னும் பதாகையின் கீழ் அதி நவீன ஸ்டேட்-ஆஃப்-தி ஆர்ட் ஷோரூம், கோவை 641018, நேரு ஸ்டேடியம், எண் 14இல் இயங்குகிறது. 

மோட்டோ மோரினி, ஜோண்ட்ஸ் மற்றும் சமிபத்திய அறிமுகமான க்யூஜே மோட்டார் உள்ளிட்ட பன்னாட்டு பிராண்ட்களின் சூப்பர் பைக்குகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தனது மல்டி பிராண்ட் தனியுரிமைக் கிளை மூலம் மேலும் பல உலகத் தரமான பிராண்ட்களை அறிமுகப்படுத்த ஆதீஷ்வர் ஆட்டோ ரைட் இந்தியா (ஏஏஆர்ஐ) திட்டமிட்டுள்ளது. விற்பனை, பழுது நீக்கம், உதிரி பாகங்கள் ஆகியவற்றுடன் ஆடைகளும், துணைப் பொருள்களும் காட்சிப்படுத்தப்படும் வகையில் அவுட்லெட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

50சிசி ஆற்றல் கொண்ட மோட்டோ மோரினி ரக சூப்பர் பைக்குகள் எக்ஸ்-கேப் 650, எக்ஸ்-கேப் 650 எக்ஸ், ஸீமெஜோ  ரெட்ரோ ஸ்ட்ரீட் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் ஆகிய 4 மாடல்கள் விலை   ரூ 6,89,000/- (எக்ஸ் ஷோரூம் இந்தியா) தொடங்கி விற்கப்படும். 350 சிசி ஆற்றல் கொண்ட ஜோண்ட்ஸ் ரக சூப்பர் பைக்குகள் 350 ஆர், 350 எக்ஸ், ஜிகே 350, 350டி மற்றும் 350 டி ஏடிவி ஆகிய 5 மாடல்களில் விலை ரூ 3,15,000/- (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) தொடங்கி விற்கப்படும். 250 சிசி மற்றும் 400 சிசி ஆற்றல் கொண்ட க்யூஜே மோட்டார் ரக சூப்பர் பைக்குகள் எஸ்ஆர்சி 250, எஸ்ஆர்சி 500, எஸ்ஆர்வி 300 மற்றும் எஸ்ஆர்கே 400 ஆகிய 4 மாடல்களில் விலை  ரூ 1,99,000/- (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) தொடங்கி விற்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்று ஆதீஷ்வர் ஆட்டோ ரைட் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விகாஸ் ஜபாக் பேசுகையில் ‘ கோவையில் மோட்டோ வால்ட் என்ற பெயரில் மல்டி பிராண்ட் சூப்பர் பைக் தனியுரிமைக் கிளையைத் தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரிவான பல்வகைப் பொருள்கள், விற்பனை, பழுது நீக்கல் ஆகியவற்றை நீட்டிக்கும் எங்கள் உறுதிமொழியை இந்த தனியுரிமைக் கிளை அறிவிப்பு உறுதிப்படுத்தும்’ என்றார்.

புதிய விநியோகயுரிமை குறித்துச் கோவை மோட்டோ வால்ட் டீலர் பிரின்சிபல்  சி எஸ் விக்னேஷ்வர் கூறுகையில் ‘மோட்டோ வால்ட் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.  எங்களது வாடிக்கையாளர் சார்ந்த அணுகுமுறை மூலம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிக்கலற்ற பிரிமியம் விற்பனை மற்றும் பழுது நீக்கும் சேவைகளை வழங்குவதே எங்கள் நோக்கமாகும். வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உரிமையாளர் அனுபவத்தை வழங்கும் வகையில், எங்களது கோவை மோட்டோ வால்ட் நிறுவன  தொழில்முறை வல்லுனர்கள் அனைவதும் பன்னாட்டுத் தரக் கட்டுப்பாடுகளுக்கு இணங்கப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்’ என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form