காசி டூ இராமேஸ்வரத்திற்கு சிறப்பு யாத்திரை ரயில் சேவை

 


பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் இயங்கும் சௌவுத் ஸ்டார் இரயிலில், மாதந்தோறும் காசி- இராமேஸ்வரத்திற்கு சிறப்பு யாத்திரையாக , மதுரையிலிருந்து இரயில் சேவை இயக்கப்பட உள்ளது.  இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, 44 வருடம் இரயில் சுற்றுலா சேவையில் அனுபவமிக்க டிராவல்டைம்ஸ் நிறுவத்தினால் இந்த சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.

காசி- இராமேஸ்வரத்திற்கான முதல் புறப்பாடு, 11.08.2023 அன்று 11 நாட்கள் சிறப்பு யாத்திரையாக இயக்கப்பட உள்ளது. பயணிகள் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், காட்பாடி போன்ற இடங்களில் ஏறிக்கொள்ளலாம்.  

சீனியர் சிட்டிசன் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு LTC சலுகைகள் உள்ளது.  இந்த ரயிலில் First AC, 2AC, 3AC, பேண்டரி கார் உடனான 22SL கோச் உள்ளன. தென்னிந்திய உணவு வகைகள் வழங்கப்படும். மேலும்,  சுற்றிப்பார்த்தல், மேலாளர் மற்றும் பாதுகாவலர்வசதியைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதியவர்களுக்கான கூடுதல் நன்மை என்னவென்றால், யாத்திரிகர்கள் சுற்றுலா பார்வையிடச் செல்லும்போது அல்லது இரவு தங்கும் போது தங்கள் சாமான்களை ரயில் பெட்டிகளில் விட்டுவிடலாம். சுற்றுலா பயணிகளுக்கு உதவ ரயில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மேலாளர்கள் உள்ளனர். 

அவசர சிகிச்சைக்காக ஒரு மருத்துவர் இருப்பார். டிக்கெட் விலையானது சிறப்பு ரயில் கட்டணம், பயணக் காப்பீடு, படுக்கைக்கான வசதி, வகையின் படி அறைகள், அனைத்து உணவுகள், சுற்றிப் பார்ப்பது, இடமாற்றங்கள் மற்றும் சுற்றுப்பயணம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளுடன் வரும் சுற்றுலா மேலாளர்கள் ஆகியவற்றின் விலையை உள்ளடக்கியது.

கட்டண விபரம்: SL Rs.23,900/-; 3AC Rs.37,500/-;2AC Rs.44,800/-; 1AC Rs.54,600/-

முன்பதிவுக்கு, 7305858585 ,இணையதள முன்பதிவுக்குwww.railtourism.com

Post a Comment

Previous Post Next Post

Contact Form