இந்தியாவின் முன்னணி உடல்நல பராமரிப்பு பிராண்டுகளில் ஒன்றான ஹிமாலயா வெல்னஸ் கம்பெனி, குழந்தைப் பராமரிப்பிற்கான அதன்
தயாரிப்பு ரகங்களில் பிஎச் அளவு 5.5 கொண்ட க்ரெம் க்ளென்சிங் பேபி பாரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தேங்காய்ப் பால் புரோட்டீனின் ஊட்டம் தரும் நற்குணங்களும், பல்வேறு இயற்கையான மூலப்பொருள்களின் கலவையும் நிறைந்துள்ளது. புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மற்றும் சென்சிட்டிவ் சருமம் கொண்ட குழந்தைகளுக்காகவே 100 சதவிகிதம் சோப் இல்லாமல், 5.5 என்கிற பிஎச் சமநிலை கொண்ட ஃபார்முலாவுடன் இந்த பேபி பார் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு பொது வியாபாரக் கடைகள், இணையவழி விற்பனைத் தளங்கள், ஹிமாலயா ரீடெயில் ஸ்டார்கள், மற்றும் அதிகாரப்பூர்வ ஹிமாலயா இணையதளத்தில் இந்த தயாரிப்பு 75 கிராம் மற்றும் 100 கிராம் அளவுகளில் கிடைக்கிறது.
இந்த புதிய அறிமுகம் குறித்து பேசிய ஹிமாலயா வெல்னஸ் கம்பெனியின் பேபிகேர் பிரிவின் இயக்குனர், சக்ரவர்த்தி என்.வி, “குழந்தைகளின் பிரத்தியேக பராமரிப்பிற்கான எங்களது பல்வேறு தயாரிப்புகளில், ‘க்ரெம் க்ளென்சிங் பேபி பார்’ என்கிற இந்த புதிய வரவினை, அவர்கள் மீது நாங்கள் வைத்துள்ள பேரன்புடன் சேர்த்து வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். 5.5 என்கிற பிஎச் அளவு கொண்ட இந்த க்ரீம் க்ளென்சிங் பேபி பார் - புதிதாகப் பிறந்த இந்த க்ளென்சிங் பார் - பச்சிளம் குழந்தைகள், எளிதாக பாதிக்கக்கூடிய சென்சிட்டிவான சருமம் கொண்ட குழந்தைகள், மற்றும் அடோபிக் டெர்மடிடிஸ், தோல் எரிச்சல், சிவந்து போகுதல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய சருமத்தினை கொண்ட குழந்தைகளின் சருமத்தை மென்மையாக சுத்தப்படுத்தும் சரியான இயற்கை மூலப்பொருட்களால் செறிவூட்டப்பட்டதாகும்” என்றார்.
“குழந்தைகளின் சருமத்தின் பிஎச் அளவை சரியாகப் பராமரிப்பதும், அவர்களது ‘ஆசிட் மேண்டிலை’ பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானதாகும். குழந்தை பராமரிப்பிற்கான தயாரிப்புகளில் இயற்கையான மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதால் சரும எரிச்சல் மற்றும் பிற சரும பாதிப்புகளை தவிர்க்க முடிகிறது. இதிலுள்ள தேங்காய் பால் புரோட்டீன், மஹுவாவெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஆகியவை - நீண்டகாலமாகவே அவற்றின் ஈரப்பதமளித்தல், இதமளித்தல் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளுக்காக நன்கு அறியப்பட்ட இயற்கையான பொருட்களாகும். அவை தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் குழந்தைகளின் மிருதுவான சருமத்தின் மீது மென்மையாக செயல்படுகின்றன”, என்று ஹிமாலயா வெல்னஸ் நிறுவனத்தின், ஆராய்ச்சி அண்ட் மேம்பாட்டுத் துறையின், ஆயுர்வேத வல்லுநர், டாக்டர். பிரதிபா பாப்ஷெட் தெரிவித்தார்.
ஹிமாலயா க்ரெம் க்ளென்சிங் பேபி பாரில் தாவரத்திலிருந்து பெறப்பட்ட தேங்காய் புரோட்டீனின் நன்மைகள் நிறைந்துள்ளன - இது குழந்தையின் எளிதில் பாதிக்கக்கூடிய சென்சிட்டிவ் தன்மை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதம் தருகிறது, மற்றும் சருமத்தைப் பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. தேங்காய் எண்ணெய், தோலின் அரணாக மேம்பட்ட செயல்தன்மை வாய்ந்ததாக அறியப்படுகிறது. நன்கு அறியப்பட்ட மாய்ஸ்சரைசரான மஹுவா பட்டர் (இலுப்பை வெண்ணெய்) ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும், குளித்த பின்பு வறட்சியைக் குறைக்கவும் உதவுகிறது; குழந்தையின் சருமத்திற்கு இதமளித்து, ஈரப்பதத்துடன் வைக்க கற்றாழை உதவுகிறது.