வனுவாடு யுஐஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ சேர்க்கைகள் துவக்கம்

 


அப்கிரேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் வனுவாடு அதன் குடியரசின் போர்ட் விலாவில் உள்ள தனது வளாகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி திட்டங்களுக்கான சேர்க்கையைத் துவங்கியுள்ளது. இரண்டு அறிமுக நிகழ்ச்சிகளின் முதல் தொகுதி செப்டம்பர் 2023 முதல் பாதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. யுஐஎம்எஸ்-இல் எம்பிபிஎஸ் திட்டத்திற்கான தகுதிக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும், அத்துடன் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகளுக்கு மேல் இல்லாத செல்லுபடியாகும் மதிப்பெண் அட்டையுடன்  நீட் யுஜி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிரியல் அறிவியலில் 4 ஆண்டு யுஜி பட்டம் பெற்ற பட்டதாரி மாணவர்கள் 4 ஆண்டு எம்டி திட்டத்திற்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, 5.5 ஆண்டு எம்பிபிஎஸ் திட்டம், தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு இணங்க உள்ளது மற்றும் 4.5 வருட வளாகத்தில் கற்றல் மற்றும் கல்வியில் ஒரு வருட கால இன்டர்ன்ஷிப்பை போர்ட் விலாவில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட விலா சென்ட்ரல் மருத்துவமனை, சுமார் 400 படுக்கைகள் கொண்ட வனுவாட்டு குடியரசின் மிகப்பெரிய மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒருங்கிணைக்கிறது.  எம்டி திட்டம், யுஎஸ் மருத்துவ உரிமத் தேர்வுடன் சீரமைக்கப்பட்ட 2 வருட ப்ரீமெடிக்கல் படிப்புகளுடன் தொடங்கும் அதே வேளையில், ப்ரீமெடிக்கல் படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன், பட்டப்படிப்பின் முன் இருக்கும் மருத்துவப் படிப்புக்கு தடையின்றி மாற்றப்படுவார்கள்.  யுஐஎம்எஸ் சுகாதார அமைச்சகம் மற்றும் வனுவாட்டு கல்வி அமைச்சகம் ஆகிய இரண்டின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

யுஐஎம்எஸ், ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த கற்றல் திறன் மற்றும் பணியாளர் மேம்பாட்டு நிறுவனமான அப்கிரேட்-ன் ஒரு பகுதியாகும், கற்பவர்கள் தங்கள் படிப்பின் ஆரம்பத்தில், மெய்நிகர் ஓடி அமர்வுகள், டிஜிட்டல் 3டி கேடவர்ஸ், மருத்துவ மேனிக்வின்கள் மற்றும் விரிவான ஆன்லைன் உள்ளடக்கம் ஆகியவற்றைக் கொண்ட பல ஏக்கர் வளாகத்தில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.   கற்பித்தல் தரத்தை உயர்த்துவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள சில சிறந்த மருத்துவக் குழுமங்கள் மற்றும் மருத்துவமனைகளின் உயர் தகுதி வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற துணைக் குழுவை கொண்டுள்ளது. யுஐஎம்எஸ் பற்றிய விரிவான தகவல்களை   https://www.upgradmed.com/index.html வளைதளத்தில் காணலாம்.

"அப்கிராட்  அதன் வலுவான நற்சான்றிதழ்களுடன், இந்திய மாணவர்களுக்கு குறைந்த மற்றும் உயர்தர பாடத்திட்டங்களை அணுகுவதை உறுதி செய்வதற்காக மருத்துவக் கல்வியில் நுழைந்துள்ளது. யுஐஎம்எஸ் ஆனது மிகவும் வலுவான முடிவு சார்ந்த டிஎன்ஏ உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் எங்கள் பட்டதாரிகள் தேவையான உரிமத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு இந்தியாவில் மருத்துவ பயிற்சி அல்லது உயர் கல்வியைத் தொடர முடியும். பாடத்திட்டம் மற்றும் மருத்துவத்துடன் இணைந்து, எங்கள் மாணவர்கள் அவர்களின் நெக்ஸ்ட் அல்லது யுஎஸ்எம்எல்இ போன்ற உரிமத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி சதவீதத்தை அடைவதை உறுதி செய்வதே எங்கள் கவனம் உள்ளது" என கார்ப்பரேட் டெவலப்மென்ட் அண்ட் ஸ்ட்ராடஜியின் தலைவர் கௌரவ் குமார் கருத்து தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form