சில்லறை வணிகர்களுக்கு உதவும் அர்ஜூ

 


நுகர்வோர்க்கான சில்லரை விற்பனையாளர்களின் வணிகம் மேம்படுவதுடன், கடுமையான போட்டியிலும் புதிய உச்சங்களை வியாபாரம் எட்ட வேண்டும்.   இம்முனைவோடு, இந்தியாவின் மிக வேகமாக வளரும் பி2பி சில்லரை டெக் தளமான அர்ஜூ நிறுவனம், தனது அர்ஜூ ப்ரோ ஃபைனான்ஸ் ஃபிண்டெக் சேவை அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

 நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஃபிண்டெக் சேவையான ப்ரோ ஃபைனான்ஸ் ஆஃப்லைன் விற்பனையாளர்கள் சந்திக்கும் கடைக்குள் விற்பனை மாற்றத்தை அதிகரித்தல் மற்றும் உயர் மதிப்பு பொருள்களை விரும்புவோர்க்கு விற்றல் ஆகிய இரு முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறது. இது சந்தா அடிப்படையிலான சேவையாகும். சில்லரை வியாபாரிகள் வருடாந்திரத் திட்டங்களிலிருந்து விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். கூகிள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆஃப் ஸ்டோர் மூலம் ஆர்ஜூ ஃப்ரோ ஃபைனான்ஸ் சந்தாவை ஆர்ஜூவில் எளிதாகப் பெறலாம்.

உயர் மதிப்புள்ள நுகர்பொருள் வணிகத்தில் ஆஃப்லைன் சில்லரை விற்பனையாளர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றை, ஆர்ஜூ முதன் முறையாக அறிமுகப்படுத்தும் டிஜிடல் அணுகுமுறை தகர்த்தெறியும். ஆர்ஜூ அறிமுகப்படுத்தி உள்ள புதுமையான பணம் செலுத்தும் நவீன தொழில்நுட்பத் தீர்வு, பணம் செலுத்துதல், நுகர்வோர் நிதி மற்றும் வங்கி வழங்கும் சலுகைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, சவால்களை வெற்றி கொள்ளவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் சில்லரை வணிகர்களுக்கு உதவும்.

ஆர்ஜூ ப்ரோ ஃபைனான்ஸ் உயர் மதிப்பு சில்லரைப் பிரிவை மேம்படுத்த நுகர்பொருள் நிதி, பணம் செலுத்துதல் உள்பட பலவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது. பணம் செலுத்தும் தீர்வு மூலம்,  கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, நெட் பேங்கிங்க், யுபியை உள்ளிட்ட பல்வேறு பணம் செலுத்தும் முறைகளை ஒருங்கிணைத்து இயலச் செய்கிறது. புதிதாகக் கடன் பெறுவோர்க்கும் உடனடி நுகர்வோர் நிதி ஆதாரங்களை வழங்குகிறது. 

ஆஃப்லைன் சில்லரை விற்பனையோடு வங்கி வழங்கும் நுகர்வோர் சலுகைகளையும் ஒருங்கிணைக்க அர்ஜூ நிறுவனம் பல முன்னணி வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  இதற்கு வசதியாக ஆர்ஜூ  பணம் செலுத்தும் தீர்வில் ஃப்ரோ ஃபைனான்ஸ் உள்ளிடு செய்யப்படுள்ளதால், ஆஃப்லைன் நுகர்வோர்க்கும் முன்னணி வங்கிகள் வழங்கும் பிரத்யேக வங்கிச் சலுகைகளுக்கான அணுக்கம் இனி கிடைக்கும்.

இது குறித்து ஆர்ஜூ சிஇஓ குஷ்னூத் கான் கூறுகையில் ‘ஆஃப்லைன் சில்லரை வியாபாரிகளுக்காகப் பணம் செலுத்தும் அதி நவீன தொழில்நுட்பத் தீர்வை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம். இந்த நிதிக் கருவி கடைக்கு ஆற்றல் அளிப்பதுடன், தேவையான நிதி ஆதாரங்களையும் நுகர்வோர்க்கு வழங்குகிறது.  . சில்லரை வியாபார்களுக்கு ஆற்றலை வழங்கும் ஆர்ஜூவின் ப்ரோ ஃபைனான்ஸ்  புதிதாகக் கடனில் பொருள் வாகுவோர் வாழ்க்கைமுறையை மேம்படுத்தச் சிறப்பான நிதி அணுக்க வாய்ப்புகளை அளிப்பதன் மூலம், நிதி உள்ளடக்கத்தை வளர்க்கவும் உறுதி பூண்டுள்ளது’ என்றார்.  

Post a Comment

Previous Post Next Post

Contact Form