மதுரையில் பினாக்கிள் இன்ஃபோடெக்-ன் மிகப்பெரிய உலகளாவிய பொறியியல் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 மதுரையில் பினாக்கிள் இன்ஃபோடெக்கின் மிகப்பெரிய உலகளாவிய பொறியியல் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மெய்நிகர் வாயிலாக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி,  பிமல் பட்வாரி மற்றும் இணை நிறுவனர்  சப்னா பட்வாரி முன்னிலையில் திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஐஏஎஸ், எல்காட் நிர்வாக இயக்குனர் ஜே.குமரகுருபரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர். எஸ். அனீஷ் சேகர்,  பிஸ்வரூப் டோடி, பினாக்கிள் துணைத் தலைவர், சோமேஷ் குப்தா, பினாக்கிள் துணைத் தலைவர், மற்றும் தலைமை வளர்ச்சி அதிகாரி மற்றும் மதுரை செயல்பாட்டுத் தலைவர் பங்கஜ் சாவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன், மதுரை வடபழஞ்சியில் உள்ள எல்கோஎஸ்இஇசட் இல் பினாக்கிள் இன்ஃபோடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு 34.09 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது 1,80,000 சதுர அடி பரப்பளவில் தங்களின் முதல் கட்ட கட்டுமானப் பணியை பத்து மாதங்களில் முடித்து, ரூ.120 கோடி முதலீட்டில் சாதனை படைத்துள்ளது. இது 950 பணியாளர்களை உள்ளடக்கியது மற்றும் உலகத் தரம் வாய்ந்த தரவு அறை மற்றும் தரவு மையம், அதிநவீன பயிற்சி மையம், சிற்றுண்டியகம் மற்றும் இயற்கையான அழகிய நிலப்பரப்பு போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. இந்திய பசுமை கட்டிட கவுன்சில் (ஐஜிபிசி) இந்த கட்டிடத்திற்கு பிளாட்டினம் மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

கட்டிடக்கலை, பொறியியல் மற்றும் கட்டுமானத் துறைக்கான கட்டிடத் தகவல் மாடலிங்கில்  உலகளாவிய முன்னணி நிறுவனமான பினாக்கிள் இன்ஃபோடெக், இந்தியாவில் அதன் வலுவான விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் அதன் வளாகத்தை அமைத்துள்ளது. பினாக்கிள் இன்ஃபோடெக்-ன்  இந்த புதிய அதிநவீன வசதியானது உள்ளூர் திறமைகளை ஈர்த்து, அவர்களின் திறன்களை மேம்படுத்தும் மற்றும் மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய திட்டங்களில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் மூலம் பணிபுரிய தளத்தை வழங்கும். இது பினாக்கிள் இன்ஃபோடெக், இன் 12வது அதிநவீன உலகளாவிய டெலிவரி மையமாகும். நிறுவனம் அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், லண்டன், சவுதி அரேபியா, ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உலகளாவிய விநியோக மையங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் துர்காபூர், கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் சர்வதேச டெலிவரி மையங்கள் உள்ளன.

இந்தியாவில் இந்த புதிய வசதியின் துவக்கம் பற்றி பேசிய,  பினாக்கிள் இன்ஃபோடெக் இன் இணை நிறுவனரும், சிஇஓ -வுமான பிமல் பட்வாரி, “எங்கள் மதுரை வளாகம் உலகின் மிகப்பெரிய பிஐஎம் பொறியியல் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தனிச்சிறப்பு மையத்தை அமைப்பதற்கான பொறியியல் மற்றும் கட்டடக்கலைத் திறமைகள் தமிழ்நாட்டில் இருப்பதால், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்தோம். தமிழ்நாடு அரசு மற்றும் எல்காட் ஆகியோரின் உடனடி ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே 920க்கும் அதிகமான உள்ளூர் திறமையாளர்களை இங்கு பணியமர்த்தியுள்ளோம், மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் 6,000 பொறியாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களை இந்த உலகத் தரம் வாய்ந்த கட்டிடத்தில் பணியமர்த்த இலக்கு வைத்துள்ளோம் என்றார். அவர் மேலும் பேசுகையில், "மதுரையில் உள்ள எங்களின் குளோபல் இன்ஜினியரிங் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ், உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் நவீன மையங்களில் ஒன்றாக மாறி தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமையை கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

முதல் கட்டிடம் தயாராகி செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டிடத்திற்கான அடிக்கல்லை மாண்புமிகு, தமிழ்நாடு ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று நாட்டினார். தமிழ்நாட்டின். இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் ஒரு பகுதியாக, தற்போதைய கட்டிடத்தின் மற்ற பிரிவு ஆகஸ்ட் 2024 க்குள் செயல்படும் மற்றும் மேலும் 2,000 பணியாளர்களை பணியமர்த்தும். மூன்றாம் கட்டிடம் 2025 இல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது, இதில் 2,600 பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இந்த மதுரை வளாகத்தில் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஆடிட்டோரியம், கட்டுமானப் பயிற்சி மையம், ஆம்பிதியேட்டர் மற்றும் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் போன்ற உள் மற்றும் வெளிப்புற பொழுதுபோக்கு இடங்கள் இருக்கும்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form