வெக்ஸெல் கல்வி நிறுவனத்தின் வணிக மறுசீரமைப்பு ஒப்புதலைப் பெற்றது ஸ்டாம்பீட் கேபிடல் லிமிடெட்

 நிதி ஆலோசனை நிறுவனமான ஸ்டாம்பீட் கேபிடல் லிமிடெட் (எஸ்சிஏபி டிவிஆர்) நிறுவனத்தின் நீண்ட கால மூலோபாய நோக்கங்களுக்கு இணங்க வெக்ஸெல் எஜூகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இன் வணிகத்தை மறுசீரமைப்பதற்கான இணைப்பு, கையகப்படுத்தல், பிற பொருத்தமான விருப்பங்களை ஆராய முதன்மை ஒப்புதல் பெற்றுள்ளது. வெக்ஸெல் எஜூகேஷன் பிரைவேட் லிமிடெட்இன் சமபங்கு மதிப்பை நிர்ணயிப்பது தொடர்பாக பிடபிள்யுசி பிஸினஸ் கண்சல்டிங் சர்வீசஸ் எல்எல்பியை நிறுவனம் நியமித்துள்ளது.

வெக்ஸெல் என்பது பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு டிஜிட்டல் தளத்தை வழங்கும் ஆன்லைன் கல்வி நிறுவனமாகும். நிறுவனம் தற்போது 46 பள்ளிகளுடன் இணைவு/எம்ஓயுக்கள் மூலம் 27,000 மாணவர்களைக் கொண்டுள்ளது. நிறுவனம் மேலும் 154 பள்ளிகளுடன் இணைய திட்டமிட்டு அதற்காக பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் மொத்தம் 90,300 மாணவர்களைக் கொண்டிருக்கும். வெக்ஸெல் ஒரு தனித்துவமான ஆராய்ச்சி அடிப்படையிலான திட்டத்தை (மைக்ரோ லேர்னிங் புரோகிராம்) உருவாக்கியுள்ளது. இது பயனர்களின் செயல்திறனில் 30% முதல் 50% முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

பிடபிள்யுசி தனது அறிக்கையில் வெக்ஸெல் நிறுவனத்தின் ஈக்விட்டி மதிப்பை ரூ. 91 கோடியிலிருந்து ரூ.101 கோடியாக இருக்கும் என மதிப்பாய்வு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நிறுவனம் மூன்று விதமான தினசரி திருத்த அணுகுமுறையை வலியுறுத்துகிறது, அதாவது கருத்து திருத்த வீடியோக்கள், சுருக்கக் குறிப்புகள் மற்றும் கேள்வித்தாள்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

மேலும், வெக்ஸெல் எஜூகேஷன் பிரைவேட் லிமிடெட் இன் வணிகத்தை மறுசீரமைப்பது தொடர்பாக அந்நிறுவன நிர்வாகத்துடன் தேவையான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. வெக்ஸெல் இன் வணிகத்தை மறுசீரமைப்பது குறித்த விவாதம் முடிந்ததும், இரு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதல் பெறப்படும். நிறுவனம் அதன் பெயரை ‘ஸ்டாம்பீட் கேபிடல் லிமிடெட்’ என்பதில் இருந்து ‘ஜிஏசிஎம் டெக்னாலஜிஸ் லிமிடெட்’ என மாற்றியுள்ளது.

மே 2023 இல், நிறுவனம் சாதாரண வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் வேறுபட்ட வாக்களிக்கும் உரிமைகளுடன் முன்னுரிமை அடிப்படையில் ஈக்விட்டி பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது. நிறுவனம் சாதாரண வாக்குரிமையுடன் 11.12 கோடி ஈக்விட்டி பங்குகளை முக மதிப்பில் பங்கு ஒன்றுக்கு ரூ.1 என  நிர்ணயித்துள்ளது. நிறுவனம் 10.60 லட்சம் ஈக்விட்டி பங்குகளை ஒதுக்கீடு செய்து முடித்தது. 1.48 கோடி ஈக்விட்டி பங்குகளை முக மதிப்பில் பங்கு ஒன்றுக்கு ரூ.14 என நிர்ணயித்துள்ளது, என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form