கோவை ஆகாஷ் பைஜூஸைச் சேர்ந்த மாணவர் ஜேக்கப் பிவின் மதிப்புமிக்க மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) யுஜி 2023ல் நகரத்தில் முதல் மதிப்பெண்ணும், அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 36வது இடமும் பெற்று பெற்றோருக்கும் ஆகாஷ் பைஜூஸின் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். மாணவர் 720க்கு 710 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மாணவர் கூறுகையில் “ஆகாஷ் இன்ஸ்டிடியூட் எனக்கு உதவியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். இன்ஸ்டிடியூட்டில் பொருளடக்கம் மற்றும் பயிற்சி எடுக்காமல் இருந்திருந்தால் நான் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை புரிந்துகொண்டிருக்க மாட்டேன்” எனத் தெரிவித்தார்.
ஜேக்கப் பிவினுக்கு வாழ்த்து தெரிவித்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் சிஇஓ அபிஷேக் மகேஸ்வரி, “மாணவரின் முன்மாதிரியான சாதனைக்காக நாங்கள் அவரை வாழ்த்துகிறோம். ஜேக்கப்பின் சாதனை அவரது கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பறை சாற்றுகிறது. மாணவரின் வெற்றிக்கு உதவிய அவரின் பெற்றோர், ஆசிரியர்களின் முறையான வழிகாட்டுதல் மற்றும் நிறுவனத்தில் தரமான தேர்வுக்கான தயாரிப்பு ஆகியவற்றுக்கு இந்த பெருமை செல்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜேக்கப்பின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்” என்றார்.