புதுமையான, நவீன வடிவமைப்பு மற்றும் உலகத்தரத்திலான கைவினைத்திறனுக்காக கொண்டாடப்படும் இந்தியாவின் பாரம்பரிய நிறுவனமான உம்மிடி பங்காரு ஜூவல்லரி அதன் விற்பனை கண்காட்சியை மதுரையில் உள்ள ஃபார்ச்யூன் பாண்டியன் ஹோட்டலில் புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூன் 14 மற்றும் 15) அன்று நடத்தவுள்ளது.
விற்பனை கண்காட்சியில் கைவினைத்திறன்மிக்க தங்கம், வைர நகைகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்தக் கண்காட்சியில் பல்வேறு சிறந்த நகைகளுடன் காதணிகள், நெக்லஸ், தோடு, மூக்குத்தி மற்றும் திருமணத்திற்கான நகை தொகுப்புகள் காட்சிப்படுத்தப்படும்.
கண்காட்சி குறித்து உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிர்வாகப் பங்குதாரர் அமரேந்திரன் உம்மிடி கூறுகையில், “தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் கோவலன் அவனின் புதிய வாழ்க்கையைத் துவங்க கண்ணகியின் மரகதக் கொலுசை மதுரையில் உள்ள நகைச் சந்தையில் விற்றான். இதன் மூலம் இந்நகரம் பொற்கொல்லர்கள் மற்றும் நகைத் தொழிலுக்கு எப்போதும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. எங்களின் கலைநயமிக்க நுட்பமான தங்கம், வைர நகை விற்பனை கண்காட்சியை மதுரை நகரில் நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் அசத்தலான சேகரிப்புகளைக் காண எங்களின் நகைக் கண்காட்சியில் எங்களுடன் சேருமாறு மதுரை வாடிக்கையாளர்களை அழைக்கிறோம்” என்றார்.