உள்ளூர் மொழியில் குரல்வழி அறிவிப்பு: ஃபோன்பேயில் புதிய வசதி அறிமுகம்


ஃபோன்பே  நிறுவனம் தனது ஸ்மார்ட்ஸ்பீக்கர் கருவியில் குரல் வழி பேமண்ட் அறிவிப்புகள் தமிழில் வழங்கப்படுமென  அறிவித்துள்ளது. உள்ளூர் மொழிகளில் குரல் வழி அறிவிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், இனி  வாடிக்கையாளர்கள் பேமண்ட் செய்யும் போது பெறப்பட்ட தொகையை வணிகர்கள் தாங்கள் விரும்பும் மொழியிலேயே உடனடியாக சரிபார்த்துக் கொள்ளலாம். குரல் வழி பேமண்ட் அறிவிப்புகளைப் பெறும் வகையில், தற்போது ஃபோன்பே  ஸ்மார்ட்ஸ்பீக்கர்கள் நாடு முழுவதும் 19,000 பின்கோடுகளில் வணிகர்களால் பயன்படுத்தப்படுகின்றது.

 தமிழ்நாட்டில் மட்டும் கிட்டதட்ட 20 லட்சம் வணிகர்களின் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் பரிவர்த்தனைகளாக ஃபோன்பே  மாற்றியுள்ளது மேலும் அவர்கள்  அதன் க்யூஆர் குறியீடுகளை முதன்மையாகப் பயன்படுத்தி வருவதோடு பிற தீர்வுகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனோடு குரல் வழி பேமண்ட் அறிவிப்புகளைத் தமிழில் அறிவிக்கும் இந்தப் புதிய அம்சத்தால்,  ஃபோன்பே  ஃபார் பிசினஸ்  ஆப்பிற்குள் இனி அவர்கள் விரும்பும் மொழியிலேயே தங்களின் ஃபோன்பே  ஸ்மார்ட்ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தலாம்.

ஃபோன்பே  ஸ்மார்ட்ஸ்பீக்கரில் வணிகர்கள் தாங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்க ஃபோன்பே  ஃபார் பிசினஸ் அப்ளிகேஷனைத் திறந்து முகப்புத் திரையில் உள்ள ஸ்மார்ட்ஸ்பீக்கர் பிரிவுக்குள் நுழைய வேண்டும். ‘மொழி’ என்ற தலைப்பின் கீழ், கிடைக்கும் பல்வேறு மொழிகளில் உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்வு செய்யவும்.தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி சாதனத்தில் பதிவிறக்கப்படும். தேர்ந்தெடுத்த மொழியைப் பயன்படுத்துவதற்காக சாதனம் ஆஃப் ஆகி மீண்டும் ஆன் ஆகும்.

 ஸ்டோர்களில் நம்பிக்கையான மற்றும் சௌகரியமான பேமண்ட் கண்காணிப்பை வழங்கும் வகையில் கடந்த வருடம் ஸ்மார்ட்ஸ்பீக்கர்களை ஃபோன்பே அறிமுகப்படுத்தியது.  ஃபோன்பே  ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலம் பேமண்ட் உறுதிப்படுத்துதல் மிக எளிதானதாக அவர்களுக்கு மாறியுள்ளது.  4 நாட்கள் பேட்டரி ஆயுள், டேட்டா கனெக்ட்டிவிட்டி, பேட்டரி நிலையைக் காட்டும் எல்இடி இண்டிகேட்டர், பேட்டரி குறையும்போது ஆடியோ எச்சரிக்கை, கடைசியாகப் பெறப்பட்ட பேமண்ட்டை மீண்டும் கேட்பதற்கான பட்டன் என பல அம்சங்களுடன் ஃபோன்பே  ஸ்மார்ட்ஸ்பீக்கர் கிடைக்கின்றது.

ஃபோன்பே-வின் ஆஃப்லைன் வணிகத் தலைவர் விவேக் லோசெப் இந்தப் புதிய அறிவிப்பைப் பற்றிப் பேசுகையில், “வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதில் ஒரு பகுதியாக எங்கள் ஸ்மார்ட்ஸ்பீக்கர் சாதனங்கள் மிகச்சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறோம். பேமண்ட் உறுதிப்படுத்துதலுக்கான தேவை அதிகரிக்கும் இந்தச் சூழலில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வணிகர்களும் அவரவர் தேவைக்கேற்பவும் அவரவர் விரும்பும் மொழியில் பயன்படுத்தும் வகையிலும் இந்தச் சாதனத்தை மேம்படுத்துவதே எங்களின் குறிக்கோளாகும்” என்றார்.

   

Post a Comment

Previous Post Next Post

Contact Form