ஜேஇஇ மெயின்ஸ் 2023 தேர்வில் ஆகாஷ் பைஜூஸ் மாணவர்கள் சாதனை



திருச்சி ஆகாஷ் பைஜூஸை சேர்ந்த 5 மாணவர்கள் கூட்டு நுழைவத் தேர்வு(ஜேஇஇ) 2023 தேர்வில் 99 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று பெற்றோருக்கும், இன்ஸ்டிடியூட்டின் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்தனர். தேர்வு முடிவுகளை நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி ஏப்ரல் 28, 2023 அன்று அறிவித்தது. ஸ்ரீஹரி 99.86 சதவிகிதமும்,  ஏ ஜே டேனியல் கெல்வின் ரிஜூ 99.48 சதவிகிதமும், கோவர்தன் வி எம் 99.26 சதவிகிதமும்,  அர்ப்பணா மர்சினா டி 99.16 சதவிகிதம் மற்றும் அபிநந்தா ஆர் 99.04 சதவிகிதம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

உலகின் கடினமான நுழைவுத் தேர்வாக கருதப்படும் ஐஐடி ஜேஇஇ- தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்கள் ஆகாஷ் பைஜூஸ் கிளாஸ்ரூம் திட்டத்தில் சேர்ந்தனர் . ஜேஇஇ-யில் சிறந்த சதவீத மதிப்பெண் எடுத்து முதலிட பட்டியலில் அவர் நுழைந்ததற்கு கருத்துகளை புரிந்து கொள்வதில் அவர் எடுத்த முயற்சிகள் மற்றும் அவரது கற்றல் அட்டவணையை கடுமையாக பின்பற்றியதே காரணம்.

ஜேஇஇ (மெயின்ஸ்) தேர்வு மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த  வாய்ப்புகளை வழங்க இரண்டு அமர்வுகளில் நடத்தப்படுகிறது. உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி, மாணவர்களுக்கு ஆகாஷ் பைஜூஸ் ஐஐடி-ஜேஇஇ பயிற்சியை பல பாட வடிவங்களில் வழங்குகிறது. சமீபத்திய காலங்களில், ஆகாஷ் கணினி அடிப்படையிலான பயிற்சியை வளர்ப்பதில் தனது கவனத்தை அதிகரித்துள்ளது.  பயிற்சி தேர்வுகள் உண்மையான தேர்வு காட்சியை விளக்குகின்றன. இதனால் மாணவர்களுக்கு தேவையான பரிச்சயத்தையும் தேர்வை எதிர்கொள்வதில் நம்பிக்கையை பெறுகின்றனர்.

மாணவர்களை வாழ்த்தி பேசிய ஆகாஷ் பைஜூஸின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் மகேஸ்வரி கூறுகையில், “மாணவர்களின் முன்மாதிரியான சாதனைக்காக நாங்கள் அவர்களை வாழ்த்துகிறோம். அதிக சதவீத மதிப்பெண் பெற்ற இந்த சாதனை அவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகிறது. மாணவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என்றார்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் “ஆகாஷ் இன்ஸ்டிடியூட் எங்களுக்கு உதவியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ஆனால், இன்ஸ்டிடியூட்டில் பொருளடக்கம் மற்றும் பயிற்சி எடுக்காமல் இருந்திருந்தால் நாங்கள் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை புரிந்து கொண்டிருக்க மாட்டோம்” எனத் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form