திருப்பூரில் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸின் விற்பனை கண்காட்சி

புதுமையான, நவீன வடிவமைப்பு மற்றும் உலகத்தரத்திலான கைவினைத் திறனுக்காக கொண்டாடப்படும் இந்தியாவின் பாரம்பரிய நிறுவனமான உம்மிடி பங்காரு ஜூவல்லரி அதன் விற்பனை கண்காட்சியை திருப்பூரில் உள்ள பாப்பீஸ் விஸ்டா ஹோட்டலில் மே 10 மற்றும் 11ஆம் தேதி நடத்தியது. 

விற்பனை கண்காட்சியில் கைவினைத்திறன்மிக்க தங்கம், வைர நகைகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இந்தக் கண்காட்சியில் பல்வேறு சிறந்த நகைகளுடன் காதணிகள், நெக்லஸ், தோடு, மூக்குத்தி மற்றும் திருமணத்திற்கான நகை தொகுப்புகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

கண்காட்சி குறித்து உம்மிடி பங்காரு ஜூவல்லரியின் நிர்வாக பங்குதாரர் த அமரேந்திரன் உம்மிடி கூறுகையில், திருப்பூரில் எங்களுடைய நகைகளுக்கு தனிச்சிறப்பைக் கொண்ட மையமாக விளங்குகிறது. இந்த இரண்டு நாள் கண்காட்சியின் மூலம் நகைகளின் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form