பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சத்தை மேம்படுத்த ஸ்கோடா இலக்கு

 


வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு அம்சத்துக்கு தொடர்ந்து முன்னுரிமை தருவதுடன், முன்னிலை வகிப்போம் என ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிவித்துள்ளது. உலகளவில் ஸ்கோடா ஆட்டோவுக்கு க்ராஷ் பரிசோதனை மற்றும் பாதுகாப்பில் 50 ஆண்டு காலப் பாரம்பரியம் உள்ளது. இந்தியாவுக்கான பாதுகாப்பு மிக்க கார்களுக்கான அவசியத்தை வலியுறுத்துவதுடன், நிறுவனத்தின் உபாயங்களுள் இதுவே முக்கிய கவனத்தையும் பெறும். 

ஆசியாவிலேயே மிகப் பெரிய வாகன பரிசோதனை மையமான இந்தூர் நேட்ராக்ஸ் தொழிற்சாலையில் ‘ஸ்கோடாவுடன் இன்னும் பாதுகாப்பாக டிராக் டே’ நிகழ்வை நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியது. நிகழ்ச்சியில் அவசர பிரேக்கிங்க் மற்றும் 4க்கு4 ரகத்தின் ஆஃப்-லோட் திறன் உள்ளிட்ட ஸ்கோடா கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தியாவில் தயாரான கார்களுள் குளோபல் என்சிஏபி க்ராஷ் பரிசோதனைகளில் அதிகபட்ச மதிப்பீடு பெற்ற கார் என்னும் அங்கீகரத்தை ஸ்லேவியா செடான் பெற்றதைத் தொடர்ந்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் இந்த அறிவிப்பு வருகிறது. 2022 கடந்த காலாண்டில்  குஷாக் எஸ்யூவி குளோபல் என்சிஏபி பரிசோதனைகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை படைத்தது.   கோடியாக் 4க்கு4 பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பயணிகளின் பாதுகாப்புக்கான யூரோ என்சிஏபி-இன் 5 நட்சத்திர மதிப்பெண்ணைப் பெற்றன.  இப்போது, ஸ்கோடா ஆட்டோ இந்தியாவும் முழுமையான பரிசோதனைகளுக்கு உட்பட்டு 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பிட்டைப் பெற்றுள்ளது.

ஸ்லேவியா மற்றும் குஷாக் ஆகிய இரண்டிலும் 6 ஏர்பேக், மழை உணர்வி வைப்பர், தானியங்கி முகப்பு விளக்குகள், டயர் அழுத்த கண்காணிப்பு மானி, மல்டி-கொலிஷன் பிரேக்கிங்க், ஆண்டி லாக் பிரேக், டிராக்ஷன் கண்ட்ரோல், மின்னணு ஸ்டெலிபிடி கட்டுப்பாடு,  குழந்தை இருக்கைகளுக்கான ஐஸோஃபிக்ஸ் மவுண்ட், டாப் டீத்தர் ஆங்கர் பாயிண்ட்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.  மோதலுக்குப் பிந்திய மற்றும் மோதல் தடுப்புப் பாதுகாக்கும் அம்சங்களின் கலவையாக இவை விளங்குகின்றன. தனது கார்களின் தளம் மற்றும் கட்டமைப்புகளில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா கவனம் செலுத்தும். பாதுகாப்பு அம்சங்களில் முன்னிலை இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதுடன், உடல் கட்டமைப்புப்  பொறியியல், மோதலுக்குப் பிந்திய மற்றும் மோதல் நடைபெறாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் அம்சங்களில் மேம்படுவதே ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் முக்கிய இலக்காகும்.

பாதுகாப்பில் கவனம் செலுத்துவது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் சோல்க் கூறுகையில் ‘எங்கள் கார்களின் கட்டமைப்பு, லேசர் வெல்டிங்க் மூலம் உயர ரக எஃகு உலோகத்தால் ஆனதாகும்.  கடுமையான மோதல் ஏற்படும் போது அதைத் தாங்கிக் கொள்ளவும், குறைக்கவும், உதவும்.  இதன் காரணமாகவே ஸ்கோடா இந்தியா அல்லது உலகின் வேறெந்த நாட்டில் தயாரானாலும் 5 நட்சத்திர மதிப்பீட்டுடன், பெரியோர்கள் மற்றும் குழந்தைககளின் பயணத்தைப் பாதுகாப்பதில் உறுதியளிக்கிறது.   பரிசோதிக்கும் வரை பாதுகாப்பு கண்ணுக்குப் புலப்படுவதில்லை என நம்புகிறோம். சீட்-பெல்ட் மற்றும் ஏர்பேக், இஎஸ்சி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பாதுகாப்பான காருக்கு அவசியம் என்றாலும், இவற்றை விடவும் முக்கியமான பாதுகாப்பு காரின் ஒட்டு மொத்த கட்டமைப்பாகும்.  ஸ்கோடாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இதுதான். எனவே எங்கள் உபாயங்களில் பாதுகாப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால் தொடர்ந்து இதே தத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கிறோம்’ என்றார்.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனை, சந்தையியல், டிஜிடல் செயல் இயக்குனர் க்ரிஸ்டின் கான் வோன் சீலன் பேசுகையில் ‘ஒவ்வொரு முறையும் புது வாகனத்தை அறிமுகப்படுத்தும் போது பாதுகாப்புத் தரக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோவின் இருபது ஆண்டு பாரமபரியத்தில், எம்க்யூபி-ஏஓ-இன் தளம் நாட்டிலேயே முதன் முதலாகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும்.  இருக்கை பட்டை, அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு அம்சங்கள் காரணமாக இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான கார்கள் எங்களுடையதே என உறுதியளிக்கிறோம்’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form